கமல்-ரஜினி, அஜித்-விஜய்க்கு இருப்பது எனக்கு இல்லை: கவிஞர் வைரமுத்து
Send us your feedback to audioarticles@vaarta.com
கமல் - ரஜினி மற்றும் அஜித் - விஜய்க்கு இருக்கும் பிடிமானம் தனக்கு இல்லை என கவிப்பேரரசர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஆண்டாண்டு காலமாக இரண்டு முன்னணி சூப்பர் ஸ்டார்கள் போட்டியாளர்களாக உள்ளனர் என்பது தெரிந்ததே. தியாகராஜ பாகவதர் - பி.யூ சின்னப்பா, எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல், அஜித் - விஜய் என தலைமுறைகள் நடிகர்கள் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் தான் ஆரோக்கியமான நல்ல திரைப்படங்கள் ரசிகர்களுக்கு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தனக்கு கவிஞர் வாலி ஒரு நல்ல போட்டியாளராக இருந்த நிலையில் அவருக்கு பின் தனக்கு எந்தவிதமான பிடிமானமும் இல்லை என்று வைரமுத்து கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
கமல் இருக்கும் வரை
ரஜினிக்கும்
ரஜினி இருக்கும் வரை
கமலுக்கும்
விஜய் இருக்கும் வரை
அஜித்துக்கும்
அஜித் இருக்கும் வரை
விஜய்க்கும்
ஒரு பிடிமானம் இருக்கும்
எனக்கிருந்த பிடிமானத்தைப்
பிய்த்துக்கொண்டு
போய்விட்டீர்களே
வாலி அவர்களே
காற்றில் கத்தி சுற்றிக்
கொண்டிருக்கிறேன்
கவியரசர் வைரமுத்துவின் இந்த பதிவுக்கு பதிலளித்த இயக்குனர் சீனுராமசாமி கூறியதாவது:
கவிஞரே வணக்கம்,
உங்களுக்கு பிடிமானம் தமிழ்
உங்கள் தமிழுக்கு
பிடிமானம் இசை
நீங்கள் வாழ்த்தி வரவேற்க வேண்டியது உங்களுக்கு பிறகு எழுதி
கொண்டிருக்கும் உங்கள் வழிவந்த இளம் பிள்ளைகளை..
தொழில் உள்முரண்பாடுகளில் ஒன்று
நீங்கினும்
தொழில் உண்டு
ஆகவே
கவிப்பேரரசர்
வாழ்க..
கவிஞரே வணக்கம்,
— Seenu Ramasamy (@seenuramasamy) March 29, 2023
உங்களுக்கு பிடிமானம் தமிழ்
உங்கள் தமிழுக்கு
பிடிமானம் இசை
நீங்கள் வாழ்த்தி வரவேற்க வேண்டியது உங்களுக்கு பிறகு எழுதி
கொண்டிருக்கும் உங்கள் வழிவந்த இளம் பிள்ளைகளை..
தொழில் உள்முரண்பாடுகளில் ஒன்று
நீங்கினும்
தொழில் உண்டு
ஆகவே
கவிப்பேரரசர்
வாழ்க..💐@Vairamuthu https://t.co/SnJX1wC7sc
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com