தலைவியாய் கூட அல்ல; மனுஷியாய் மதிக்க வேண்டாமா?  வைரமுத்து ஆவேசம்

  • IndiaGlitz, [Sunday,October 11 2020]

கடந்த சில நாட்களுக்கு முன் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பெண் ஊராட்சி தலைவர் ஒருவர் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக அவரை நாற்காலியில் உட்கார வைக்காமல் தரையில் உட்கார வைத்ததாக புகைப்படம் ஒன்று வைரலானது. இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த நிகழ்வு குறித்து கவியரசர் வைரமுத்து தனது டுவிட்டரில் கூறியதாவது:

பட்டியலினத்துத் தாயொருத்தி
தரையில் வீசப்படுவதா?

அவரென்ன மண்புழுவா?

தலைவியாய்க் கூட அல்ல...
மனுஷியாய் மதிக்க வேண்டாமா?

என் வெட்கத்தில்
துக்கம் குமிழியிடுகிறது.

தேசியக்கொடி அரைக்கம்பத்தில்
பறக்க வேண்டிய
துயரங்களுள் இதுவும் ஒன்று

இதே சம்பவம் குறித்து நடிகர் சதீஷ் தனது டுவிட்டரில், ‘ஜாதியைக் காட்டி ஒரு ஊராட்சித் தலைவரையே நாற்காலி தராமல் தரையில் அமர வைத்த அவலம்.... கண்டிக்கத் தக்க கொடூர செயல். என்னால் சமூகத்தை மாற்ற முடியுமோ இல்லையோ... நான் என் வாழ்வில் இத்தவறை செய்ய மாட்டேன். தனி மனித ஒழுக்கத்தால் மட்டுமே இதை ஒழிக்க முடியும். #அனைவரும்சமம்’ என்று கூறியுள்ளார்.

More News

'தளபதி 65' படத்துடன் கனெக்சன் ஆன சிம்பு-சுசீந்திரன் திரைப்படம்!

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதையும் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டது என்பதையும் பார்த்தோம் 

ஆணவத்துல ஆடாதிங்கடா: திரையுலக பிரபலத்திற்கு அனிதா சம்பத் கணவர் பதிலடி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனிதா சம்பத்தின் சோகக்கதையை கிண்டல் செய்த திரையுலக பிரபலத்திற்கு அனிதா சம்பத்தின் கணவர் பதிலடி கொடுத்துள்ளதற்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

புரோமோவிலும் ஹார்ட், புரோக்கன் ஹார்ட்டா? நெட்டிசன்கள் புலம்பல்! 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று கமலஹாசன் தோன்றியதால் நிகழ்ச்சி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவில் நிகழ்ச்சியில் திருப்தி இல்லை

கேதார் ஜாதவ் நீக்கப்பட்டும் தோல்வி: அப்ப தோல்விக்கு காரணம் யார்?

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை மற்றும் கொல்கத்தா அணி மோதிய போட்டியில் கேதார் ஜாதவ்வின் ஆமை வேக ஆட்டத்தினால் தான் அந்த போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியடைந்து

அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்புக்கு தலிபான்கள் ஆதரவு தெரிவித்ததால் பரபரப்பு!

கடந்த முறை நடந்த அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் எதிர்த்துப் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் எப்படி வெற்றி பெற்றார் என்ற புதிர் இன்னும் விலகாமல் உள்ளது