பிறப்பு சிவப்பு; இருப்பு கறுப்பு: கமல் குறித்து கவியரசர் எழுதிய கவிதை
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமலஹாசன் திரையுலகிற்கு அறிமுகமாகி 61 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது தெரிந்ததே. கடந்த 1959ஆம் ஆண்டு ‘களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்த கமல்ஹாசன், இன்றுவரை தொடர்ந்து கொண்டிருப்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் கமலஹாசனின் 61 வருட திரையுலக பயணத்தை பாராட்டி அவருக்கு முன்னணி நடிகர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில் கவியரசு வைரமுத்து அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கவிதை வடிவில் ஒரு வாழ்த்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பரமக்குடியின்
அருமைக் கலைஞன்
பிறப்பு சிவப்பு;
இருப்பு கறுப்பு.
மரபுகடந்த புதுக்கவிதை
புரிதல் கடிது;
புரிந்தால் இனிது.
ஆண்டுகள் அறுபது
காய்த்த பின்னும்
நனிகனி குலுங்கும் தனிவிருட்சம்.
கலைத்தாய் தன் நெற்றியில்
மாற்றி மாற்றிச் சூடுவது
திலகத்தையும் இவர் பெயரையும்
‘கலையாக் கலையே கமல்’
பரமக்குடியின்
— வைரமுத்து (@Vairamuthu) August 14, 2020
அருமைக் கலைஞன்
பிறப்பு சிவப்பு;
இருப்பு கறுப்பு.
மரபுகடந்த புதுக்கவிதை
புரிதல் கடிது;
புரிந்தால் இனிது.
ஆண்டுகள் அறுபது
காய்த்த பின்னும்
நனிகனி குலுங்கும் தனிவிருட்சம்.
கலைத்தாய் தன் நெற்றியில்
மாற்றி மாற்றிச் சூடுவது
திலகத்தையும் இவர் பெயரையும்
‘கலையாக் கலையே கமல்’
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments