பிறப்பு சிவப்பு; இருப்பு கறுப்பு: கமல் குறித்து கவியரசர் எழுதிய கவிதை

உலகநாயகன் கமலஹாசன் திரையுலகிற்கு அறிமுகமாகி 61 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது தெரிந்ததே. கடந்த 1959ஆம் ஆண்டு ‘களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்த கமல்ஹாசன், இன்றுவரை தொடர்ந்து கொண்டிருப்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் கமலஹாசனின் 61 வருட திரையுலக பயணத்தை பாராட்டி அவருக்கு முன்னணி நடிகர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில் கவியரசு வைரமுத்து அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கவிதை வடிவில் ஒரு வாழ்த்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பரமக்குடியின்
அருமைக் கலைஞன்
பிறப்பு சிவப்பு;
இருப்பு கறுப்பு.
மரபுகடந்த புதுக்கவிதை
புரிதல் கடிது;
புரிந்தால் இனிது.
ஆண்டுகள் அறுபது
காய்த்த பின்னும்
நனிகனி குலுங்கும் தனிவிருட்சம்.
கலைத்தாய் தன் நெற்றியில்
மாற்றி மாற்றிச் சூடுவது
திலகத்தையும் இவர் பெயரையும்
‘கலையாக் கலையே கமல்’

More News

வறுமையில் வாடும் திரையரங்க ஊழியர்களுக்கு விருந்து வைத்து அசத்திய விஜய் ரசிகர்கள்: பரபரப்பு தகவல்

கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் திறக்கப்படவில்லை என்பதும் இனி எப்போது திரையரங்குகள் திறக்கப்படும் என்பது குறித்த தகவல் இல்லை என்பதும் தெரிந்ததே

எனக்காக ஒரு கவிதை எழுதுங்கள்: ஹரிஷ் கல்யாணிடம் வேண்டுகோள் விடுத்த பிக்பாஸ் நடிகை

பிக்பாஸ் போட்டியாளர்களான ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன், பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போதே ஒருவருக்கு ஒருவர் ஈர்ப்புடன் இருந்ததாக கூறப்பட்டது

3 மாதத்தில் பெய்யவேண்டிய மழை 20 நிமிடத்தில் கொட்டித்தீர்த்தக் கொடூரம்!!!

பருவமழை காலத்தில் இந்தியா உட்பட பல நாடுகளில் பல லட்சக்கணக்கான மக்கள் வாழ்க்கையை இழப்பதும், சில ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படுவதும் சகஜமாக இருந்து வருகிறது

சொகுசு காருக்குள் விபச்சாரம்: 3 ஆண்கள், 2 பெண்களை சுற்றி வளைத்த போலீஸ்

சென்னையின் முக்கிய பகுதியான வேளச்சேரியில் சொகுசு காருக்குள் விபச்சாரம் செய்த மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்களை சுற்றிவளைத்து போலீஸ் கைது செய்த சம்பவம்

1000 சிறை கைதிகளுக்கு கொரோனா… அதிகாரிகளையும் விட்டு வைக்கவில்லை… திடுக்கிட வைக்கும் தகவல்!!!

இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா தொடர்ந்து நெருக்கடி நிலையைச் சந்தித்து வருகிறது.