இளையராஜாவுக்கும், எனக்கும் மட்டும் சொந்தமல்ல.. வைரமுத்துவின் மே தின பதிவால் பரபரப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இசைஞானி இளையராஜா மற்றும் கவிஞர் வைரமுத்து பிரச்சனை கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் மே தின வாழ்த்து தெரிவித்த கவிஞர் வைரமுத்து ஒரு பாடலை பதிவு செய்து, இந்த பாடல் இளையராஜாவுக்கும் எனக்கும் மட்டும் சொந்தம் அல்ல, உழைக்கும் தோழர் ஒவ்வொருவருக்கும் சொந்தம் என்று குறிப்பிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு பாடலில் எழுத்து முக்கியமா? அல்லது இசை முக்கியமா? என்பது குறித்து சமீபத்தில் வைரமுத்து பேசிய நிலையில் அதற்கு கங்கை அமரன் பதிலடி கொடுத்திருந்தார் என்பதும் இதனால் சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று மே 1, உழைப்பாளர் தினத்தை அடுத்து கமல்ஹாசன், விஜய் உள்பட பலர் தங்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்த நிலையில், கவிஞர் வைரமுத்து மே தின பாடல் ஒன்றை பதிவு செய்து அந்த பாடலை எழுதியது வைரமுத்து, இசை இளையராஜா, பாடியது ஜேசுதாஸ் என குறிப்பிட்டு இந்த பாடல் இந்த மூவருக்கும் மட்டும் சொந்தம் அல்ல உழைக்கும் வர்க்கத்தினர் அனைவருக்கும் சொந்தம் என்று குறிப்பிட்டுள்ளார். வைரமுத்துவின் அந்த பதிவு இதோ:
உழைப்பு, காதல், பசி
இந்த மூன்றுமே
மண்ணுலகை இயக்கும்
மகா சக்திகள்
அந்த உழைப்பு
உரிமை பெற்ற நாள்
இந்த நாள்
தூக்குக் கயிற்றுக்குக்
கழுத்து வளர்த்தவர்களும்
குண்டுகள் குடைவதற்காக
நெஞ்சு நீட்டியவர்களும்
வீர வணக்கத்துக்குரியவர்கள்
இந்தச் சிறப்பு நாளுக்கு
ஒரு சிவப்புப் பாடல் காணிக்கை
எழுத்து வைரமுத்து
இசை இளையராஜா
குரல் ஜேசுதாஸ்
இந்தப் பாட்டு
இந்த மூவருக்கு மட்டுமல்ல
உழைக்கும் தோழர்
ஒவ்வொருவருக்கும் சொந்தம்
உழைப்பு, காதல், பசி
— வைரமுத்து (@Vairamuthu) May 1, 2024
இந்த மூன்றுமே
மண்ணுலகை இயக்கும்
மகா சக்திகள்
அந்த உழைப்பு
உரிமை பெற்றநாள்
இந்த நாள்
தூக்குக் கயிற்றுக்குக்
கழுத்து வளர்த்தவர்களும்
குண்டுகள் குடைவதற்காக
நெஞ்சு நீட்டியவர்களும்
வீர வணக்கத்துக்குரியவர்கள்
இந்தச் சிறப்பு நாளுக்கு
ஒரு சிவப்புப் பாடல் காணிக்கை… pic.twitter.com/owIP8uBEJC
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout