வைரமுத்துவின் "நாம் நடந்த தெருவில்" காதல் பாடல் வெளியானது...! கமெண்டுகளை குவிக்கும் காதல்வாசிகள்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
கவிஞர் வைரமுத்து அவர்கள் "நாட்படு தேறல்" என்ற தலைப்பின் கீழ் தனது 5-வது பாடலை வெளியிட்டுள்ளார்.
வைரமுத்து "நாட்படு தேறல்" என்ற தலைப்பில், 100 பாடல்களை எழுதியுள்ளார். இவை 100 இசையமைப்பாளர்கள், 100 இயக்குனர்கள் மற்றும் 100 பாடகர்களை வைத்து உருவாக்கப்பட உள்ளது. இத்தொகுப்பின் முதல் பாடல் கடந்த ஏப்ரல் 18-இல் தொலைக்காட்சி மற்றும் யுடியூப் சேனல்களில் வெளியானது.
இந்நிலையில் இத்தொகுப்பின் 5-ஆம் பாடல் "நாம் நடந்த தெருவில்" என்ற தலைப்பின் கீழ் வெளியாகியுள்ளது.
பாடலை சரண் இயக்க, ஆலாப் ராஜீ பாடி,இசையமைத்திருக்கிறார். பாடல் வரிகள் கீழே,
"நாம் நடந்த தெருவில்
நான் மட்டும்
நிழல் விழுந்த தெருவில்
இருள் மட்டும்
கவிதை பாடிய குயில்கள்
இறந்து போனதடி
காலம் என்னும் நதியோ
வடிந்து போனதடி
கண்ணீர் எரித்த சாம்பல் மட்டும் காற்றில் அலையுதடி
இந்தத் தெருவில் காகம் கரைந்தால்
இசைதான்
இந்தத் தெருவில் புழுதி பறந்தால்
மணம்தான்
இந்தத் தெருவில் வேப்பங் கனியும்
தேன்தான்
இத்தனை மாயம் நிகழ்ந்த காரணம்
நீதான்
காதல் நடந்த வீதியிலே
நடந்து பார்த்தல் கொடுமையே
தேகம் தேடி ஆடை ஒன்று
நடந்து போதல் நரகமே
ஒரு சொல்லும் பேசாமலே
ஊமைக் காதல் முடிந்ததடி- நம்
இதயங்களின் உரையாடலைத்தான்
இந்தத் தெருவே பேசுதடி
சாயம்போன பூக்கள் பூக்கும்
மரங்கங்- நம்
கன்னம் போலக் காரை பெயர்ந்த
சுவர்கள்
திண்ணை எல்லாம் ஓடிப்போன
குடில்கள்
உன்னை என்னைத் தேடிப் பார்க்கும்
தடங்கள்
வீதியிருந்தும் வெறுமையாய்
ஜாதியிருந்தும் தனிமையாய்
இலக்கணத்தில் மட்டும் அல்ல
வாழ்க்கையிலும் ஒருமையாய்
ஒரு சொல்லும் பேசாமலே
ஊமைக் காதல் முடிந்ததடி- நம்
இதயங்களின் உரையாடலைத்தான்
இந்தத் தெருவே பேசுதடி"
காதல் வசம் கொண்ட காதலர்கள் இப்பாடலை ரசித்த வண்ணம், கமெண்டுகளை அள்ளிக்குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments