விஜய் 60' படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற பாடலாசிரியர்

  • IndiaGlitz, [Sunday,January 31 2016]

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் ஏப்ரலில் இந்த படம் வெளியாகவுள்ள நிலையில் விஜய்யின் 60வது படம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவர தொடங்கியுள்ளது.


'அழகிய தமிழ் மகன்' இயக்குனர் பரதன் இயக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் பாடல் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் ஐந்து பாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த ஐந்து பாடல்களையும் பலமுறை தேசிய விருது பெற்ற கவியரசு வைரமுத்துவே எழுதவுள்ளதாகவும் இயக்குனர் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய் நடித்த 'புலி' படத்திலும் அனைத்து பாடல்களையும் வைரமுத்துதான் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்த தகவல் இன்னும் இரண்டொரு நாட்களில் அறிவிக்கவுள்ள்தாகவும், இந்த படம் அனைத்து தரப்பினர்களையும் கவரும் வகையில் ஒரு குடும்பப்பாங்கான படமாக இருக்கும் என்றும் இயக்குனர் பரதன் தெரிவித்துள்ளார்.