திரைப்படமாகும் வைரமுத்துவின் 'கள்ளிக்காட்டு இதிகாசம்': ஹீரோ, இயக்குனர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,April 20 2023]

கவிஞர் வைரமுத்து எழுதிய ’கள்ளிக்காட்டு இதிகாசம்’ என்ற நாவல் திரைப்படமாக உருவாக இருப்பதாகவும் இந்த படத்தை பிரபல இயக்குனர் இயக்க இருப்பதாகவும் பிரபல நடிகர் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

கவிஞர் வைரமுத்து எழுதிய புகழ்மிக்க நாவல் ’கள்ளிக்காட்டு இதிகாசம்’. இந்த புத்தகத்திற்கு கடந்த 2003 ஆம் ஆண்டு சாகித்திய விருது கிடைத்த போது இந்த புத்தகம் 23 மொழிகளில் மொழிபெயர்க்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை அருகே வைகை அணை கட்டப்பட்ட போது காலி செய்யப்பட்ட 14 கிராம மக்களின் போராட்டம் தான் இந்த நாவலின் கதை என்பதும் மண் சார்ந்த மக்களின் வலியோடு சொன்ன படைப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி சாதனை செய்துள்ள இந்த நாவலை திரைப்படம் ஆக்க ’மதயானை கூட்டம்’, ‘ராவண கூட்டம்’ இயக்குனர் விக்ரம் சுகுமாரன் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்க சியான் விக்ரம் பரிசீலனை செய்யப்பட்டு இருப்பதாகவும் ’பொன்னியின் செல்வன் 2’ படத்தின் ரிலீசுக்கு பின் அவர் விக்ரமை நேரில் சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.