தமிழுக்காக வைரமுத்து செய்த நிதியுதவி

  • IndiaGlitz, [Wednesday,January 31 2018]

கடந்த சில நாட்களாக ஆண்டாள் பிரச்சனை காரணமாக தலைப்பு செய்திகளில் இடம்பெற்று வந்த கவியரசு வைரமுத்து மீண்டும் முக்கிய செய்தியில் இடம்பெற்றுள்ளார். ஆனால் இந்த முறை ஹார்வர்டு பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைய அவர் செய்த நிதியுதவி குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

உலகில் உள்ள ஏழு செம்மொழிகளில் தமிழுக்கு மட்டுமே ஹார்வர்டு பல்கலையில் இருக்கை இல்லை என்ற குறை உலக தமிழர்களின் மனதில் இருந்த நிலையில் தற்போது இந்த இருக்கையை பெற உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் நிதியுதவி செய்து வருகின்றனர்.

கோலிவுட் திரையுலகில் கமல்ஹாசன், விஷால், ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ் உள்பட பலரும் தமிழ் இருக்கைக்காக நிதியுதவி செய்துள்ளனர். தமிழக அரசும் ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக ரூ.5 லட்சம் நிதியுதவி செய்துள்ளார். இதற்கான காசோலையை ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்குழு உறுப்பினர் டாக்டர் ஆறுமுகம் முருகையாவிடம் வைரமுத்து நேற்று வழங்கினார்.