கொரோனா நிவாரண நிதியாக கவியரசு வைரமுத்து கொடுத்த தொகை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவி செய்யும் வகையில் பொதுமக்கள் தொழிலதிபர்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டுமென தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் கேட்டுக்கொண்டார்

இதனை அடுத்து திரையுலக பிரபலங்கள் பலர் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து நிதி வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சிவகுமார் குடும்பத்தினர் ஒரு கோடியே, அஜித் 25 லட்சம், ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஒரு கோடி, ஏஆர் முருகதாஸ் 25 லட்சம் என பலர் நிதி உதவி செய்து வருவது குறித்த செய்திகளை பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி கவியரசு வைரமுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூபாய் 5 லட்சம் அளித்துள்ளார். நேற்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை நிவாரண நிதியாக வைரமுத்து அளித்து உள்ளார். அதேபோல் திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் அவர்கள் ஒரு லட்சம் நிவாரண நிதியாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சித்தார்த் என்ன நடிகர்களின் பிரதிநிதியா? கஸ்தூரி ஆவேசம்

சமீபத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய்நாத் குறித்து நடிகர் சித்தார்த் கடுமையான வார்த்தைகளை கொண்டு தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொரோனா சிகிச்சை வார்டிலும் பாலியல் வன்கொடுமை? பெண் உயிரிழந்த பரிதாபம்!

இந்தியாவில் கொரோனாவினால் தினம்தோறும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.

நாளை முதல் கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு: தமிழக அரசு அதிரடி உத்தரவு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து மே 10ஆம் தேதி முதல் மே 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பதும் இந்த ஊரடங்கின்போது,

வெற்றி பெற்றிருந்தால் வெளியேறி இருப்பீர்களா? கமல் கட்சியில் இருந்து வெளியேறியவர்களை விளாசிய பிக்பாஸ் பிரபலம்!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி அதிமுக திமுகவை அடுத்து மூன்றாவது அணியாக போட்டியிட்டது என்பதும்

ச்சே என்ன மனுசன்யா.. ..சீமானுக்கு ஆறுதல் கூறிய ஸ்டாலின்...! இணையத்தில் வைரலாகும் வீடியோ...!

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள்,  சீமானுக்கு தொலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறியுள்ளார்.