அசைக்க முடியாத ஆதாரம் உள்ளது: சின்மயி குற்றச்சாட்டு குறித்து வைரமுத்து பதில்

  • IndiaGlitz, [Sunday,October 14 2018]

கடந்த சில நாட்களாக பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டுக்கள் ஊடகங்களின் தலைப்பு செய்தியாகவும், விவாத பொருளாகவும் இருந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் வைரமுத்து தற்போது மெளனத்தை கலைத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது:

என்மீது குற்றம் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு முற்றிலும் உள்நோக்கம் உடையது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் என் மீது வழக்கு தொடர்ந்தால் வழக்கை சந்திக்க தயாராக உள்ளேன். மூத்த வழக்கறிஞர்களோடும், அறிவுலக ஆன்றோர்களிடமும் கடந்த ஒரு வாரமாக ஆழ்ந்து ஆலோசித்து வந்தேன்.

அசைக்க முடியாத ஆதாரங்களை தொகுத்து திரட்டி வைத்துள்ளேன். நான் கெட்டவனா? நல்லவனா? என்பதை இப்பொழுது யாரும் முடிவு செய்ய வேண்டாம். என் மீது புகார் கூறுபவர்கள் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடர்ந்தால் அதனை சந்திக்க காத்திருக்கின்றேன். நீதிக்கு தலை வணங்குகிறேன் என்று வைரமுத்து கூறியுள்ளார்.

 

More News

அஜித் விஜய் ரசிகர்களுக்கான ஆயுதபூஜை விருந்து

தளபதி விஜய், கீர்த்திசுரேஷ், வரலட்சுமி நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'சர்கார்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.

அக்டோபர் 26ல் ரிலீஸ் ஆகும் விஜய்சேதுபதியின் அடுத்த படம்

விஜய்சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு 'ஜூங்கா', 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்', 'இமைக்கா நொடிகள்', 'செக்க சிவந்த வானம்' மற்றும் '96' திரைப்படங்கள் வெளியாகியுள்ளது

பிரியதர்ஷனின் அடுத்த படத்தில் 'விஸ்வரூபம்' நாயகி

தேசிய விருது பெற்ற இயக்குனர் பிரியதர்ஷன் இந்த ஆண்டு உதயநிதி நடித்த 'நிமிர்' மற்றும் பிரகாஷ்ராஜ் நடித்த 'சம்டைம்ஸ்' ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்

'சண்டக்கோழி' மூன்றாம் பாகம் குறித்து லிங்குசாமி

விஷால், கீர்த்திசுரேஷ் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி இயக்கிய 'சண்டக்கோழி 2' திரைப்படம் வரும் 18ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள

'96' திரைப்படம்: மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்த ராம்-ஜானு

சமீபத்தில் வெளிவந்த '96' திரைப்படத்தை பார்த்தவர்கள் நிச்சயம் தங்களுடைய பள்ளி வாழ்க்கையை நினைக்காமல் இருக்க முடியாது