மலேசிய அமைச்சருக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து
Send us your feedback to audioarticles@vaarta.com
மலேசியாவில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வாழ்ந்து வரும் நிலையில் அவர்கள் அரசு பதவிகள் உள்பட முக்கிய பொறுப்புகளிலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழர்கள் மலேசியாவில் பல உயர்பதவிகளில் உள்ளனர். அந்த வகையில் மலேசியாவின் டத்தோ ஸ்ரீ சரவணன் என்ற தமிழரின் பெயர் சற்றுமுன் வெளியான புதிய அமைச்சர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
அந்த வகையில் தற்போது டத்தோ ஸ்ரீ சரவணன் அவர்களின் நெருங்கிய நண்பரும் கவிஞருமான வைரமுத்து அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: மலேசியத் திருநாட்டின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகிறார் டத்தோஸ்ரீ சரவணன். திருக்குறள் அதிகாரம் போல் அவர் ஆட்சி அதிகாரம் சிறக்க வாழ்த்துகிறேன்.
முன்னதாக மலேசியாவின் எட்டாவது பிரதமராக சென்ற வாரம் பதவியேற்ற முகைதீன் யாசின் புதிய அமைச்சரவைப் பட்டியலை சற்றுமுன் வெளியிட்டார். இந்த அமைச்சர்கள் பட்டியலில் டத்தோஸ்ரீ சரவணன் பெயர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மலேசியாவில் துணைப் பிரதமர் என்ற பதவி இனி இல்லை என்றும், அதற்குப் பதிலாக நான்கு மூத்த அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் முகைதீன் அறிவித்தார்.
மலேசியத் திருநாட்டின்
— வைரமுத்து (@vairamuthu) March 9, 2020
மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகிறார்
டத்தோஸ்ரீ சரவணன் @DatukSaravanan
திருக்குறள் அதிகாரம் போல்
அவர் ஆட்சி அதிகாரம் சிறக்க
வாழ்த்துகிறேன். pic.twitter.com/168o9XrfVe
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com