வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வைரமுத்து வாழ்த்து
- IndiaGlitz, [Monday,July 22 2019]
இந்திய விண்வெளித்துறையின் அடுத்த மைல்கல்லான சந்திராயன் 2 விண்கலம் இன்று சரியாக 2.43 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. சந்திரயான்-2 விண்கலம் புறப்பட்ட சில சில நிமிடங்களில் புவிவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது
சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதில் மகிழ்ச்சி அடைவதாகவும், இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடுமையான உழைப்பிற்கு கிடைத்த வெற்றி இது என்றும், கடந்த ஒன்றரை ஆண்டுகள் சிறிதும் ஓய்வின்றி சந்திரயான் 2-க்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் உழைத்ததாகவும், அவர்கள் உழைப்பால் தான் இன்று இந்த சாதனை நடந்துள்ளது என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த விண்கலம் சந்திரனின் தென்துருவத்தை ஆராயவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த வெற்றிகரமான நிகழ்வு குறித்து கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:
130கோடி இந்தியர் உதடுகள் முணுமுணுக்கின்றன.
“வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை”.
இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்தி
இந்தியா எழுந்து நின்று கைதட்டுகிறது.
என்று கவிதை வடிவில் வைரமுத்து கூறியுள்ளார்.
130கோடி இந்தியர் உதடுகள் முணுமுணுக்கின்றன.
— வைரமுத்து (@vairamuthu) July 22, 2019
“வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை”.
இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்தி
இந்தியா எழுந்து நின்று கைதட்டுகிறது.@isro #Chandrayaan2theMoon