ஒரே டுவிட்டில் மூன்று பிரச்சனைகளுக்கும் கண்டனம் தெரிவித்த வைரமுத்து!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பிரச்சனையையும் மீறி மூன்று பிரச்சனைகள் ஊடகங்களின் தலைப்பு செய்திகளாகி வருகின்றன. ஒன்று சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து திருக்குறள் நீக்கப்பட்டதாக வெளிவந்த தகவல். ராணுவத்தினர் மத்தியில் பேசும்போது திருக்குறளை மேற்கோள் காட்டி பேசும் பிரதமர், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து திருக்குறள் நீக்கப்படுவதை எப்படி அனுமதிக்கின்றார் என்பதே தமிழ் ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.

அடுத்ததாக சமீபத்தில் கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருப்பர் கூட்டம் குறித்த பிரச்சனை. இந்த பிரச்சனையில் ஒருசில முக்கிய தலைவர்கள் தவிர கிட்டத்தட்ட அனைத்து அரசியல் தலைவர்களும் பெரும்பாலான திரையுலக பிரபலங்களும் கண்டனக்குரல்களை எழுப்பியுள்ளனர்.

அதேபோல் மூன்றாவது பிரச்சனையாக பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரம். கந்தசஷ்டி கவசம் பிரச்சனைக்கு பொங்காத அரசியல் தலைவர்கள் கூட பெரியார் சிலை விவகாரத்திற்காக பொங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் கவியரசு வைரமுத்து இந்த மூன்று பிரச்சனைகளுக்கும் ஆறே வரி கவிதை ஒன்றின் மூலம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

திருக்குறள் மேற்கோள் காட்டப்படுவதைப்
பாராட்டும் எங்களால் திருக்குறள் நீக்கப்படுவதை
ஏற்றுக்கொள்ள முடியாது.

பெரியார் இழிவு செய்யப்படுவதைச்
சகிக்க முடியாத எங்களால் முருகன் அடியார்கள்
காயப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

கவியரசு வைரமுத்துவின் இந்த பதிவுக்கு நெட்டிசன்களின் பாராட்டுக்களும் வழக்கம்போல் சிலரின் எதிர்ப்புகளும் பதிவாகி வருகிறது.

More News

நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த திடீரென விழுந்த பல்: சமாளித்த தொகுப்பாளினி

நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த பெண் செய்தி வாசிப்பாளரின் பாதிக்கப்பட்ட பல் ஒன்று திடீரென்று உடைந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கவர்ச்சி போஸ் கொடுத்து தத்துவமழை பொழிந்த அமலாபால்!

கொரோனா லாக்டவுன் விடுமுறையில் படப்பிடிப்பில் இல்லாமல் வீட்டில் இருக்கும் பல நடிகர் நடிகைகள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் வேடிக்கையான, வினோதமான வீடியோக்களையும்

இரண்டாம் பாகமாக உருவெடுக்கும் விஜய் ஆண்டனியின் சூப்பர்ஹிட் படம்!

விஜய் நடித்த 'வேட்டைக்காரன்' மற்றும் 'காதலில் விழுந்தேன்' 'அங்காடித்தெரு' உள்பட பல திரைப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி,

கொரோனா தடுப்பு: உடம்புல இதை மட்டும் குறையாம பாத்துக்கோங்க… எய்ம்ஸ் மருத்துவரின் முக்கிய ஆலோசனை!!!

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி வரும் நிலையில் சுயப் பாதுகாப்பு மிகவும் அவசியமான ஒன்றாக மாறியிருக்கிறது.

மும்பை மழை எனது உடற்பயிற்சியை ஆனந்தமாக்குகிறது: தமன்னா

தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா இந்த கொரோனா விடுமுறையில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை