வான்வழி வந்தோர் மேன்மக்கள், மண்வழி சென்றோர் கீழ்மக்களா? வைரமுத்து
- IndiaGlitz, [Thursday,August 13 2020]
கேரளாவில் சமீபத்தில் நிகழ்ந்த இரண்டு இயற்கை பேரிடர் அம்மாநில மக்களை பெரும் அதிர்ச்சி அடையச் செய்தது. ஒன்று கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் ராஜமலை என்ற பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரோடு சுமார் 80 பேர் புதையுண்டதாகவும், இதுவரை சுமார் 60 உடல்கள் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் மண்ணில் புதையுண்டவர்களை கடந்த ஒரு வாரமாக மீட்கும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக உள்ளனர்
இதேபோல் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் சுமார் 20 பேர் மரணமடைந்தனர் என்பதும், பலர் காயமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழக அரசியல்வாதிகள் சிலர் விமான விபத்து மீட்புப்பணிகளில் காட்டும் அக்கறையை நிலச்சரிவு மீட்புப் பணியில் கேரள அரசு காட்டவில்லை என்று குற்றஞ்சாட்டி வருகின்றனர்
இது குறித்து கவிஞர் வைரமுத்துவும் தனது சமூக வலைத்தளத்தில் கவிதை வடிவில் ஒரு குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
விமான விபத்து மீட்சியைத்
திறம்பட நிகழ்த்திய கேரள
ஆட்சியைப் பாராட்டுகிறோம்.
அதேபோல் மண்ணில் புதைந்த
மக்களுக்கும் விரைந்த மீட்பும்
தகுந்த காப்பும் வழங்க வேண்டுகிறோம்.
வான்வழி வந்தோர் மேன்மக்களல்லர்;
மண்வழி சென்றோர் கீழ்மக்களல்லர் என்பது பொதுவுடைமை பூமிக்குப் புரியாதா என்ன?
கவிஞர் வைரமுத்துவின் இந்த டுவிட்டுக்கு ஆதரவு கமெண்ட்டுக்கள் அதிகமாக பதிவாகி வருகின்றன.
விமான விபத்து மீட்சியைத்
— வைரமுத்து (@Vairamuthu) August 13, 2020
திறம்பட நிகழ்த்திய கேரள
ஆட்சியைப் பாராட்டுகிறோம்.
அதேபோல் மண்ணில் புதைந்த
மக்களுக்கும் விரைந்த மீட்பும்
தகுந்த காப்பும் வழங்க வேண்டுகிறோம்.
வான்வழி வந்தோர் மேன்மக்களல்லர்;
மண்வழி சென்றோர் கீழ்மக்களல்லர் என்பது பொதுவுடைமை பூமிக்குப்
புரியாதா என்ன?#Kerala