சூரியனால் முடியாதது இந்தியால் முடியுமா? வைரமுத்து கேள்வி
Send us your feedback to audioarticles@vaarta.com
சூரியனால் கூட ஒட்டுமொத்த உலகிற்கு ஒரே நேரத்தில் பகலை கொடுக்க முடியாதபோது இந்தியால் மட்டும் எப்படி ஒரே இந்தியாவிற்கு ஒரே மொழியாக இருக்க முடியும் என்ற கேள்வியை கவியரசு வைரமுத்து எழுப்பியுள்ளார்.
கவிஞர் வைரமுத்து எழுதிய தமிழாற்றுப்படை புத்தக அறிமுக விழா நாமக்கல்லில் நடைபெற்றது. இந்த விழாவில் வைரமுத்து கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
'இந்தி மொழிதான் இந்தியாவை இணைக்க முடியும் என்ற ஒரு கருத்து அண்மையில் உரைக்கப்பட்டது. அதில் தமிழர்களுக்கு மட்டுமின்றி, இந்தி மொழி பேசாத எந்த மாநிலத்து மக்களுக்கும் உடன்பாடு இருக்காது. சூரியன்கூட இந்த ஒட்டுமொத்த பூமிக்கு ஒரே பகலைக் கொண்டு வந்து இணைக்கமுடியவில்லை. இந்தி மட்டும் எப்படி இந்தியாவை இணைத்துவிட முடியும்?
இரு மொழிக் கொள்கை என்பது தான் அண்ணா இந்த மண்ணுக்கு வகுத்து கொடுத்த ஜீவ கொள்கை. இரு மொழிக் கொள்கையில் தமிழர்கள் உறுதியாக இருப்பார்கள். அரசு உறுதியாக இருக்க வேண்டும், என விரும்புகிறோம்' என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout