அதிமுக தொண்டர்களைப் திடீரென பாராட்டிய கவிப்பேரரசு வைரமுத்து: ஏன் தெரியுமா?
- IndiaGlitz, [Thursday,January 28 2021]
முன்னாள் திமுக தலைவர் மு கருணாநிதியின் நெருங்கிய நண்பரும் பல ஆண்டுகளாக திமுகவின் ஆதரவாளராக இருந்து வருபவருமான கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் திடீரென அதிமுக தொண்டர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவகம் நேற்று சென்னை மெரினாவில் திறக்கப்பட்டது. இதனை காண்பதற்காக லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்தனர்
அந்தவகையில் ஜெயலலிதாவின் நினைவிடத்தை பார்வையிட்ட அதிமுக தொண்டர்கள் அருகில் இருந்த கருணாநிதியின் நினைவிடத்தையும் சென்று பார்வையிட்டனர். அதிமுக தொண்டர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கருணாநிதியை நினைவிடத்தையும் பார்வையிட்டது ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வெளிவந்தது
இந்த நிலையில் அதிமுக தொண்டர்களின் இந்த செயல் குறித்து கவிப்பேரரசு வைரமுத்து தனது டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:
கலைஞர் நினைவிடத்தில்
அன்பு காட்டிய அ.இ.அ.தி.மு.க
தொண்டர்களைப் பாராட்டுகிறேன்;
வாழ்த்துகிறேன்.
இந்தப் பழைய பாசமும் நாகரிகமும்
அரசியலைத் தாண்டி
திராவிட இயக்கங்களில்
தேனாகப் பரவட்டும்.
நெகிழ்கிறேன்; மகிழ்கிறேன்
கலைஞர் நினைவிடத்தில்
— வைரமுத்து (@Vairamuthu) January 28, 2021
அன்பு காட்டிய அ.இ.அ.தி.மு.க
தொண்டர்களைப் பாராட்டுகிறேன்;
வாழ்த்துகிறேன்.
இந்தப் பழைய பாசமும் நாகரிகமும்
அரசியலைத் தாண்டி
திராவிட இயக்கங்களில்
தேனாகப் பரவட்டும்.
நெகிழ்கிறேன்; மகிழ்கிறேன்.#கலைஞர் @kalaignar89