வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும்: எச்.ராஜா
Send us your feedback to audioarticles@vaarta.com
பாஜக கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கடந்த சில மாதங்களில் ரஜினி, கமல், விஜய், விஷால் என திரையுலக பிரமுகர்களை அடுத்தடுத்து விமர்சித்து வந்த நிலையில் தற்போது அவருடைய பார்வை கவியரசு வைரமுத்துவின் மீது விழுந்துள்ளது.
சமீபத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்த 'தமிழை ஆண்டாள்' என்ற ஆண்டாள் குறித்த கருத்தரங்கத்தில் கவியரசு வைரமுத்து கலந்து கொண்டார். பிரபல நாளிதழ் ஒன்று ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் ஆண்டாள் குறித்து வைரமுத்து பேசிய கருத்துக்களுக்கு எச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூகவலைத்தளத்தில் கூறியதாவது:
இந்துக்களின் மத உணர்வுகளை திட்டமிட்டு காயப்படுத்துவது என்பது வைரமுத்து போன்றவர்களுக்கு வாடிக்கை. இதற்கு தினமணி களம் அமைத்துக் கொடுத்துள்ளது துரதிர்ஷ்டவசமானது. இவர்கள் இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில் வைரமுத்து பேசியது விஷமத்தனமானது. ஒரு அநாகரீகமான நபருக்கு தினமணி களம் அமைத்துக் கொடுத்துள்ளது துரதிர்ஷ்டவசமானதும் கண்டிக்கத்தக்கதுமாகும். தினமணி நாளிதழின் தரமும் மரியாதையும் ஒரு நொடியில் குலைந்து போனது. தினமணி நாளிதழ் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று எச்.ராஜா கூறியுள்ளார். எச்.ராஜாவின் இந்த கருத்துக்கு டுவிட்டர் பயனாளிகள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com