வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும்: எச்.ராஜா

  • IndiaGlitz, [Tuesday,January 09 2018]

பாஜக கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கடந்த சில மாதங்களில் ரஜினி, கமல், விஜய், விஷால் என திரையுலக பிரமுகர்களை அடுத்தடுத்து விமர்சித்து வந்த நிலையில் தற்போது அவருடைய பார்வை கவியரசு வைரமுத்துவின் மீது விழுந்துள்ளது.

சமீபத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்த 'தமிழை ஆண்டாள்' என்ற ஆண்டாள் குறித்த கருத்தரங்கத்தில் கவியரசு வைரமுத்து கலந்து கொண்டார். பிரபல நாளிதழ் ஒன்று ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் ஆண்டாள் குறித்து வைரமுத்து பேசிய கருத்துக்களுக்கு எச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூகவலைத்தளத்தில் கூறியதாவது:

இந்துக்களின் மத உணர்வுகளை திட்டமிட்டு காயப்படுத்துவது என்பது வைரமுத்து போன்றவர்களுக்கு வாடிக்கை. இதற்கு தினமணி களம் அமைத்துக் கொடுத்துள்ளது துரதிர்ஷ்டவசமானது. இவர்கள் இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில் வைரமுத்து பேசியது விஷமத்தனமானது. ஒரு அநாகரீகமான நபருக்கு தினமணி களம் அமைத்துக் கொடுத்துள்ளது துரதிர்ஷ்டவசமானதும் கண்டிக்கத்தக்கதுமாகும். தினமணி நாளிதழின் தரமும் மரியாதையும் ஒரு நொடியில் குலைந்து போனது. தினமணி நாளிதழ் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று எச்.ராஜா கூறியுள்ளார். எச்.ராஜாவின் இந்த கருத்துக்கு டுவிட்டர் பயனாளிகள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

More News

தளபதி விஜய் இப்போது எங்கே இருக்கின்றார் தெரியுமா?

தளபதி விஜய் சமீபத்தில் குடும்பத்துடன் லண்டன் சென்ற நிலையில் தற்போது லண்டனில் இருந்து அவர் குடும்பத்துடன் சீனாவுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு முதலமைச்சர் கொடுத்த முக்கிய பதவி

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களை ஆஸ்கார் விருது உள்பட பல்வேறு விருதுகள் தேடி வந்த நிலையில் தற்போது சிக்கிம் முதலமைச்சர் முக்கிய பதவியை அவருக்கு அளித்துள்ளார்.

மெரினா புரட்சியை கையில் எடுக்கின்றார் பாண்டிராஜ்

பாண்டிராஜ் அவர்களின் அடுத்த படத்தின் டைட்டில் குறித்த விபரங்கள் இன்று மாலை அறிவிக்கப்படும் என ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு திரும்புவோம், ஆனால் பயணிகளிடம் காசு வாங்க மாட்டோம்: போக்குவரத்து ஊழியர்கள் எச்சரிக்கை

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து வருவதால் பொதுமக்கள் பெரும் அவதியில் உள்ளனர். அலுவலகங்கள் சென்று வருபவர்கள், மாணவர்கள் ஆகியோர் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

ரஜினியின் முதல் அரசியல் மாநாடு குறித்த தகவல்

ரஜினிகாந்த் கடந்த மாதம் 31ஆம் தேதி அரசியலுக்கு வருவது உறுதி என்றும் தன்னுடைய அரசியல் ஆன்மீக அரசியல் என்றும், வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்றும் அறிவித்தார்.