இதுதான் முதல் முறை: 'காப்பான்' படம் குறித்து கபிலன் வைரமுத்துவின் டுவீட்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடித்த காப்பான் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னையில் நடைபெறுகிறது. இதனையடுத்து இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது
இந்த போஸ்டரில் பாடலாசிரியர்களின் பெயர்கள் அச்சுப்பிழையா? என ஒருசிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். ஏனெனில் அந்த போஸ்டரில் வைரமுத்து, கபிலன், கபிலன் வைரமுத்து என குறிப்பிடப்பட்டுள்ளதே அதற்கு காரணம். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கபிலன் வைரமுத்து, பாடலாசிரியர்களின் பெயர் பட்டியல் அச்சுப் பிழையா என்று சிலர் கேட்கிறார்கள். மூன்று பேரும் ஒரே படத்தில் எழுதுவது இது முதல் முறை.. பெயர்களைத் தனித்தனியாக வாசிக்கவும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதாவது மதன் கார்க்கியின் பெயரை கபிலன் என குறிப்பிட்டு, கபிலன் பெயரை கபிலன் வைரமுத்து என குறிப்பிடப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த குழப்பத்தை தவிர்க்க வைரமுத்து, மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து என்றே குறிப்பிட்டிருக்கலாம் என்று ஒருசிலரும், அச்சுப்பிழையை சமாளிக்க கபிலன் கூறும் அழகிய கவிதை என்றும் ஒருசிலரும் கமெண்ட் அளித்துள்ளனர்.
நாளை முதல் இசை??
— KabilanVairamuthu (@KabilanVai) July 20, 2019
பாடலாசிரியர்களின் பெயர் பட்டியல் அச்சுப் பிழையா என்று சிலர் கேட்கிறார்கள்?? மூன்று பேரும் ஒரே படத்தில் எழுதுவது இது முதல் முறை.. பெயர்களைத் தனித்தனியாக வாசிக்கவும்??#KaappaanAudioLaunch@anavenkat @Suriya_offl @Jharrisjayaraj @LycaProductions pic.twitter.com/bIji4EpkH7
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments