சகோதரி ஜோதிகாவுக்கு வைரமுத்து கூறிய அறிவுரை

  • IndiaGlitz, [Tuesday,February 20 2018]

கடந்த வாரம் பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ், இவானா நடிப்பில் வெளியான 'நாச்சியார்' படத்திற்கு ஊடகங்கள் மற்றும் விமர்சகர்கள் பாராட்டுக்களை தெரிவித்த நிலையில் கவியரசு வைரமுத்து அவர்கள் தற்போது இந்த படத்தை பார்த்து பாராட்டியுள்ளார்.

வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: நாச்சியார் பார்த்தேன். கலையின் நிகழ் நீரோட்டத்தில் நிற்கிறீர்கள்; பலே பாலா! ஜோதிகாவின் நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் காக்கிக்கே ஒரு கர்வம். நீங்கள் தொடர்ந்து கலையில் இயங்க வேண்டும் சகோதரி. தம்பி ஜீ.வி! உன் ஜீவிதத்தில் ஒரு படம் இது; பாராட்டுகிறேன். ஒளிப்பதிவு செய்த ஈஸ்வர்! வெள்ளைக்காரக் கண்களோடு பிறந்த தமிழனப்பா நீ! படக்குழுவுக்கு என் வாழ்த்துக்கள்' என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து மூன்று ஹிட் படங்கள் கொடுத்துள்ள ஜோதிகா நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்று ஏற்கனவே நடிகர் சிவகுமார் கூறியுள்ள நிலையில் தற்போது வைரமுத்துவும் அதே கருத்தை பிரதிபலித்துள்ளார். இந்த கருத்துக்களை ஏற்றுக்கொண்டது போல் தற்போது ஜோதிகா, மணிரத்னம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி வித்யாபாலன் நடித்த பாலிவுட் படம் ஒன்றில் ரீமேக்கிலும் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஜனகராஜ் எடுக்கும் புதிய அவதாரம்

கடந்த 90களில் ரஜினி, கமல் உள்பட முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக ஜொலித்தவர் ஜனகராஜ் என்பது தெரிந்ததே. அவரது காமெடியும் பாடி லேங்வேஜூம் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.

'தளபதி 62' படக்குழுவினர்களுக்கு போடப்பட்ட திடீர் நிபந்தனை

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 62' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இசைஞானியுடன் மீண்டும் இணைந்த தனுஷ்

தனுஷ் நடித்து வரும் 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்திற்காக யுவன்ஷங்கர் ராஜா இசையில் இசைஞானி இளையராஜா ஒரு பாடலை பாடினார்

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் அப்பா-மகள் படத்தின் முழு விபரங்கள்

நடிகர் சிவகார்த்திகேயன் தனது நெருங்கிய நண்பர் அருண்காமராஜ் இயக்கும் திரைப்படம் ஒன்றை தயாரிக்கின்றார் என்றும், இந்த படத்தின் பூஜையுடன் கூடிய முதல் நாள் படப்பிடிப்பு லால்குடியில் நடைபெற்றது

விவேக் குற்றச்சாட்டுக்கு ஒரு மணி நேரத்தில் பதிலளித்த விமான நிறுவனம்

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் தனது படங்களில் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் சமுதாய சிந்தனைகளை தெரிவித்து வருபவர் என்பது தெரிந்ததே.