close
Choose your channels

'கபாலி' பேச்சு குறித்த சர்ச்சை. வைரமுத்து விளக்கம்

Thursday, July 28, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படம் தோல்வி என்று பிரபல பாடலாசிரியரும், ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான வைரமுத்து நூல் வெளியீட்டு விழாவில் பேசியதாக ஏற்பட்ட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வைரமுத்து வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த ஞாயிறு என் நண்பரின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டேன். நூலாசிரியரின் கடவுள் நம்பிக்கை குறித்து நான் பேச நேர்ந்தது. அவரது கடவுள் நம்பிக்கையோ எனது கடவுள் மறுப்போ எங்கள் நட்புக்கு எந்த வகையிலும் தடையாய் இருந்ததில்லை என்பதை விளக்கி சொன்னேன்
கடவுளை ஏற்றுக் கொள்வது ஒரு நிலை. புரிந்து கொள்வது ஒரு நிலை. ஏற்றுக் கொள்ளாவிட்டால்கூட அதன் உளவியல் தேவையை புரிந்து கொண்டிருக்கின்றேன் என்பதை விரிவாக சொல்ல முயன்றபோது, ஆண்-பெண் - உறவுகள் -இல்லறம் -அன்பு - காதல் - கண்ணீர்- அரசியல் - கலை - அண்மையில் காணாமல் போன விமானம் மற்றும் கபாலியின் தோல்வி இவைகளை ஏற்றுக் கொள்ள முடியாத இடத்திலும் புரிந்து கொள்ள வேண்டும் என்று உணர்ச்சி ஓட்டத்தில் குறிப்பிட்டேன். நான் சொன்ன வேகத்தில் ஒரு வார்த்தை விடுபட்டுப் போய்விட்டது என்று பிறகு புரிந்து வருந்தினேன். கபாலி வெற்றி தோல்வி என்று பேசப்படுவதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்ல வந்தேன். அதில் வெற்றி என்ற வார்த்தை விடுபட்டுவிட்டது.
என் நோக்கம் நான் சார்ந்திருக்கும் திரையுலகை, நான் பெரிது நேசிக்கும் ரஜினியை திட்டமிட்டு குறைத்து சொல்வதல்ல. என் நெஞ்சு தூய்மையானது. ஒரு வார்த்தை அதற்கு வசப்படாமல் போயிருக்கலாம். அதை யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.
இந்த செய்தி வெளியாவதற்கு முன்பே திரு ரஜினி சென்னை வந்த மறுநாள் அவரிடமே தொலைபேசியில் இதைக் குறிப்பிட்டு சொன்னேன். அவர் எனக்கும் சில நண்பர்கள் அப்படித்தான் சொன்னார்கள் என்று பெருந்தன்மையாக பேசினார். எங்கள் நட்பு பெரியது. தயவு செய்து யாரும் இதை சர்ச்சையாக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு வைரமுத்து தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment