சுவிட்சர்லாந்தில் நடந்தது என்ன? சின்மயி கூறும் திடுக் தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின்போது வைரமுத்துவின் அறைக்கு செல்லுமாறு தான் நிகழ்ச்சி ஏற்பாட்டார்களால் வற்புறுத்தப்பட்டதாகவும், ஆனால் தான் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டு இந்தியாவுக்கு தனது தாயாருடன் திரும்பிவிட்டதாகவும் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பாடகி சின்மயி கூறியுள்ளார்.
வைரமுத்துவுக்கு ஒத்துழைப்பு தராவிட்டால் தன்னுடைய கேரியர் இதனால் பாதிக்கும் என்று சுவிட்சர்லாந்து விழா ஏற்பாட்டாளர்கள் மிரட்டியதாக அவர் அந்த பேட்டியில் மேலும் கூறியுள்ளார். விழா ஏற்பாட்டாளர்கள் கூறியதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்த தனது தாய், தன்னை உடனே இந்தியாவிற்கு அழைத்து வந்துவிட்டதாகவும் சின்மயி கூறியுள்ளார்.
இந்த சம்பவம் நடந்த சமயத்தில் வைரமுத்து செல்வாக்கு நிறைந்தவராக இருந்ததால் இதுகுறித்து வெளியே சொல்லவில்லை என்றும், தற்போது பல பெண்கள் தைரியமாக தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து பேசி வருவதால் தானும் இந்த விஷயத்தை வெளியே கூறியதாகவும், நான் சொல்வதை பார்த்து இன்னும் பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து பேச முன்வருவார்கள் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் சின்மயி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இருப்பினும் வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள் தைரியமாக வெளியே சொல்வது கடினம்தான் என்றும் சின்மயி தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments