'மெர்சல்' படம் பார்த்து பாராட்டு தெரிவித்த வைகோ
Send us your feedback to audioarticles@vaarta.com
'தளபதி' விஜய்யின் 'மெர்சல்' திரைப்படம் ஒரு திரைப்படம் என்பதையும் தாண்டி ஒரு சமுதாய பிரச்சனையாக கடந்த இரண்டு நாட்களாக நாடு முழுவதும் விவாதம் செய்யப்பட்டு வருகிறது. தமிழ் சேனல்களும், ஆங்கில சேனல்களும் ஜிஎஸ்டிக்கு எதிரான விஜய்யின் போர் என்ற தலைப்பில் விவாதம் செய்து கொண்டிருக்கின்றன. இன்னும் பிபிசி போன்ற சர்வதேச ஊடகங்களிலும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை
கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் 'மெர்சல்' படத்தின் ஜிஎஸ்டி வசனங்கள் குறித்து கருத்து கூறிவிட்ட நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று சென்னை திரையரங்கில் 'மெர்சல்' படம் பார்த்தார். படம் பார்த்துவிட்டு வெளியே வந்து செய்தியாளர்களிடம் தெரிவித்த வைகோ, 'மெர்சல் படத்தில் சமுதாயத்திற்கு தேவையான கருத்துகள் உள்ளதாகவும், விஜய் உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்வதாகவும் வைகோ கூறியுள்ளார்.
ஜிஎஸ்டிக்கு எதிராக எந்த பெரிய நடிகரும் இதுவரை சொல்லாத கருத்தை விஜய் கூறி பூனைக்கு மணியை கட்டிவிட்டார். விஜய்யை அடுத்து இனி பெரிய நடிகர்கள் ஜிஎஸ்டிக்கு எதிராக தங்கள் படங்களில் குரல் கொடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout