மருமகன் தீக்குளிப்பிற்கு சீமான் கட்சியினரே காரணம்: வைகோ திடுக்கிடும் குற்றச்சாட்டு
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று காலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நெருங்கிய உறவினர் சரவண சுரேஷ் விருதுநகரில் தீக்குளித்து 80% தீக்காயத்துடன் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம், அவர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்தே தீக்குளித்தார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று மதுரையில் தீக்குளித்த சரவண சுரேஷை பார்க்க மருத்துவமனைக்கு வந்த வைகோ, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், 'சீமான் கட்சியினர்களின் மோசமான மீம்ஸ் காரணமாகவே தனது மருமகன் தீக்குளித்ததாக குற்றஞ்சாட்டினார்
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தன்னை சந்தித்த சரவண சுரேஷ், ஸ்டெர்லைட் விஷயம் குறித்தும், நியூட்ரினோ போராட்டம் குறித்தும், சீமான் கட்சியை சேர்ந்த ஒருவர் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி மீம்ஸ் பதிவு செய்திருப்பதாகவும் கூறி வருத்தப்பட்டார். மேலும் அவருக்கு நான் ஆறுதல் சொல்லி அனுப்பினேன். ஆனால் மனமுடைந்த அவர் தீக்குளித்துள்ளார். எனவே இளைஞர்கள் யாரும் உணர்ச்சிவசப்பட்டு தீக்குளிக்க வேண்டாம் என கைகூப்பி காலில் விழுந்து கேட்டுக்கொள்வதாகவும் வைகோ கண்ணீருடன் செய்தியாளர்களிடம் உருக்கமாக கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout