திமுக எஃகு கோட்டைக்கு ரஜினியால் சேதாராமா? வைகோ பதில்

  • IndiaGlitz, [Wednesday,May 29 2019]

திமுக ஒரு எஃகு கோட்டை என்றும், ரஜினியால் அந்த கோட்டைக்கு எந்தவித சேதாரத்தையும் ஏற்படுத்த முடியாது என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

ரஜினியின் அரசியல் வருகையால் திமுகவுக்கு பாதிப்பு வருமா? என்ற கேள்விக்கு பதிலளித்த வைகோ, 'ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்பதே கேள்விக்குறி என்றும், அரசியலுக்கு வருவது குறித்து அவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறிய வைகோ, அப்படியே ரஜினி வந்தாலும் திமுக கட்டமைத்துள்ள எஃகு கோட்டைக்கு எந்த சேதாரமும் வந்துவிடும் என தான் கருதவில்லை என்று கூறினார்

மேலும் தமிழகத்தில் திமுகவின் வெற்றிக்கு பாஜகவின் எதிர்ப்பு அலைதான் காரணம், திமுகவின் செல்வாக்கு காரணம் இல்லை என்ற ரீதியில் ரஜினி கூறியதற்கு பதிலளித்த வைகோ, ஒரு வெற்றியை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்ப்பார்கள் என்றும், இது ரஜினியின் கோணம் என்றும், என்னை பொருத்தவரையில் திமுக தலைவரின் கடுமையான உழைப்பும், பாஜக தமிழகத்திற்கு செய்த துரோகத்தால் எழுந்த எதிர்ப்பு அலையும் காரணம் என்றும் வைகோ கூறினார்.

More News

ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்கள்

ஒவ்வொரு ஆண்டும் அதிக தமிழ் சினிமாவில் நடித்து கொண்டும், ஒருசில படங்களுக்கு இசையமைத்து கொண்டும், ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளில் வெற்றிகரமாக சவாரி செய்து வருபவர் ஜிவி பிரகாஷ்.

மிகப்பெரிய போராடம் வெடிக்கும்: தியேட்டர் உரிமையாளர்களுக்கு பாரதிராஜா எச்சரிக்கை

திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய சதவிகித கணக்கு நேற்று வெளியான நிலையில் இந்த திட்டத்திற்கு பாரதிராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆர்வம்: சூர்யா

ஆந்திர முதல்வராக பதவியேற்கவுள்ள ஜெகன்மோகன் ரெட்டி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். 

நிருபரிடம் சாதி பெயரை கேட்ட கிருஷ்ணசாமிக்கு அன்புமணி ஆதரவா?

சென்னையில் நேற்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணாமி செய்தியாளர்களை சந்தித்தபோது நிருபர்களுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

என்னை விட்டுட்டு போயிட்டாங்கப்பா: உலகக்கோப்பை டீமை திட்டிய நடிகர்!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை முதல் இங்கிலாந்து நாட்டில் தொடங்கவுள்ள நிலையில் கடந்த 1983ஆம் ஆண்டு முதல்முறையாக கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பை கிரிக்கெட் கோப்பையை வென்றது