மக்கள் நலக்கூட்டணியில் இருந்து திடீர் விலகல். வைகோ அதிரடி அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,December 27 2016]

கடந்த மே மாதம் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலின்போது வைகோவின் தீவிர முயற்சியால் உருவானது மக்கள் நலக்கூட்டணி. இந்த கூட்டணியில் கடைசி நேரத்தில் விஜயகாந்தின் தேமுதிகவும், ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரசும் இணைந்தது. ஆனால் இந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட விஜயகாந்த் உள்பட அனைவரும் தோல்வியை தழுவினர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே மக்கள் நலக்கூட்டணியின் தலைவர்களுடன் வைகோவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதை நிரூபிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன், மக்கள் நலக்கூட்டணி தேர்தலுக்காக மட்டுமே உருவானது என்று சமீபத்தில் கூறினார்.

இந்நிலையில் சற்று முன்னர் மக்கள் நலக்கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுவதாக வைகோ அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த முடிவை மதிமுகவின் உயர்மட்டக்குழு எடுத்துள்ளதாகவும், கூட்டணியில் இருந்து விலகினாலும், மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுடனான நட்பு தொடரும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோவின் இந்த முடிவிற்கு கருத்து தெரிவித்துள்ள திருமாவளவன், 'வைகோ முடிவை ஏற்பதாகவும், மக்கள் நலக் கூட்டியக்கம் நிரந்தரமான அமைப்பல்ல என்றும் கூறியுள்ளார். மேலும் மதிமுக விலகியபோதிலும் மக்கள் நலக் கூட்டு இயக்கத்தில் இடதுசாரிகள், விசிக தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More News

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் போட்டியா?

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடந்து வரும் நிலையில்...

சசிகலாவை சந்தித்தாரா அஜித்?

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் தல அஜித், அவருடைய மறைவின்போது...

ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த தைரியம் இருந்திருக்குமா? ராம்மோகன் ராவ் பேட்டி

தமிழக தலைமை செயலாளராக இருந்த ராம்மோகன் ராவ் வீட்டில் சமீபத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை செய்தனர்.

'சென்னை 28 II' என் கதை போலவே உள்ளது. பிரபல கிரிக்கெட் வீரர் ஆச்சரியம்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான சென்னை 28 II' திரைப்படம், நாட்டில் ரூபாய் நோட்டு பற்றாக்குறை உச்சத்தில் இருந்தபோது வெளிவந்த படம். ஆயினும் இந்த படம் நல்ல வசூலை பெற்று மிகப்பெரிய வெற்றி பெற்றது.