ஆபத்தானவர் பட்டியலில் வைகோ! நாட்டிற்குள் நுழையவும் தடை: மலேசியா அதிரடி

  • IndiaGlitz, [Friday,June 09 2017]

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் அவர் மீது இந்தியாவிலும் இலங்கையிலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமியின் மகள் திருமணத்திற்காக இன்று மலேசியாவுக்கு சென்ற வைகோவை மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மலேசிய போலீசார் தடுத்து நிறுத்தினர்.

மலேசியாவின் ஆபத்தானவர் பட்டியலில் வைகோ பெயர் இருப்பதாகவும், இதனால் அவரை மலேசியாவிற்குள் அனுமதிக்க முடியாது என்றும் கூறிய மலேசிய போலீசார் அவரது பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் இன்றிரவு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார் என்று கூறப்படுகிறது.

வைகோவை மலேசிய போலீசார் தடுத்து நிறுத்தியதற்கு மதிமுக தொண்டர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

More News

இந்தியில் ஜீரோ, தமிழில் எட்டு: சூர்யாவுக்கு ஆச்சரியம் அளித்த அனிருத்

சூர்யா, கீர்த்திசுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் சூர்யாவின் பிறந்த நாளில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

பாண்டிராஜ் இயக்கத்தில் முதன்முறையாக இணையும் சூர்யா-கார்த்தி

கோலிவுட் திரையுலகில் சூர்யா, கார்த்தி சகோதரர்கள் இருவருமே முன்னணி நடிகர்களாக இருந்து வரும் நிலையில் இருவரும் இணைந்து விரைவில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்...

இந்திய அரசும், இந்திய கிரிக்கெட் அணியும் ஒன்று! எப்படி தெரியுமா?

ஐசிசி சாம்பியன்ஷிப் டிராபி கிரிக்கெட் போட்டி தொடரில் கடந்த ஞாயிறு அன்று பாகிஸ்தான் அணியை பந்தாடிய இந்திய அணி, நேற்று இலங்கைக்கு எதிரான போட்டியில் எதிர்பாராத தோல்வியை அடைந்தது...

ஜனாதிபதி தேர்தலை புறக்கணியுங்கள்: தமிழக அரசியல்வாதிகளுக்கு பிரபல இயக்குனர் வேண்டுகோள்

தமிழக அரசியலில் கடந்த சில மாதங்களாக பல்வேறு குழப்பங்கள் இருந்து வருகின்றன. இந்த குழப்ப நிலையை ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை பொறுத்திருந்து பார்த்துவிட்டு பின்னர் அதிரடி நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்...

மீண்டும் ரசிகர்களை சந்திப்பது எப்போது? சென்னை திரும்பிய ரஜினி பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 28ஆம் தேதி முதல் மும்பையில் நடைபெற்ற 'காலா' திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த நிலையில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த பின்னர் நேற்று சென்னை திரும்பினார்...