ஆபத்தானவர் பட்டியலில் வைகோ! நாட்டிற்குள் நுழையவும் தடை: மலேசியா அதிரடி
Send us your feedback to audioarticles@vaarta.com
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் அவர் மீது இந்தியாவிலும் இலங்கையிலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமியின் மகள் திருமணத்திற்காக இன்று மலேசியாவுக்கு சென்ற வைகோவை மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மலேசிய போலீசார் தடுத்து நிறுத்தினர்.
மலேசியாவின் ஆபத்தானவர் பட்டியலில் வைகோ பெயர் இருப்பதாகவும், இதனால் அவரை மலேசியாவிற்குள் அனுமதிக்க முடியாது என்றும் கூறிய மலேசிய போலீசார் அவரது பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் இன்றிரவு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார் என்று கூறப்படுகிறது.
வைகோவை மலேசிய போலீசார் தடுத்து நிறுத்தியதற்கு மதிமுக தொண்டர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com