புழல் சிறையில் வைகோ. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு ஏன்?

  • IndiaGlitz, [Monday,April 03 2017]

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை தேச துரோக வழக்கில் 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கி, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த, 2009ஆம் ஆண்டு, சென்னையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அவர் மீது பதிவு செய்யப்பட்ட தேசத் துரோக வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது வைகோ நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கில் தான் ஜாமீனில் செல்ல விரும்பில்லை என்று நீதிமன்றத்தில் வைகோ கூறியதையடுத்து, அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில் வைகோ புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

More News

ஓபிஎஸ் அணியில் பிரபல திரைப்பட பாடலாசிரியர்

'பாண்டவர் பூமி', 'ஆட்டோகிராப்', 'ராம்', உள்பட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிய பிரபல பாடலாசிரியர் சினேகன் இன்று ஓபிஎஸ் அணியின் இணைந்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் அணியில் மற்றொரு முன்னாள் அதிமுக அமைச்சர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுக, சசிகலா அணி, ஓபிஎஸ் அணி இரண்டாக உடைந்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதால் சசிகலா அணியை டிடிவி தினகரன் தலைமையேற்று வழிநடத்தி வருகிறார்.

இந்திய மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என நான்கு துறைகளிலும் வெற்றி பெற்று இந்திய சினிமாவின் முக்கிய கலைஞராக விளங்குபவர் பிரபுதேவா.

குடிபோதையில் மத்திய பெண் அமைச்சர் காரை பின் தொடர்ந்த 4 மாணவர்கள் கைது

பின்தொடர்ந்ததாக டெல்லி பல்கலைக்கழகத்தின் 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.,

முதல் வேலை விவசாயிகளை காப்பது? தயாரிப்பாளர் தேர்தலில் வெற்றி பெற்ற விஷால் பேட்டி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற விஷால் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.