புழல் சிறையில் வைகோ. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு ஏன்?
- IndiaGlitz, [Monday,April 03 2017]
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை தேச துரோக வழக்கில் 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கி, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த, 2009ஆம் ஆண்டு, சென்னையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அவர் மீது பதிவு செய்யப்பட்ட தேசத் துரோக வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது வைகோ நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கில் தான் ஜாமீனில் செல்ல விரும்பில்லை என்று நீதிமன்றத்தில் வைகோ கூறியதையடுத்து, அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில் வைகோ புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.