வைகைப்புயல் வடிவேலுவின் 'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்' மோஷன் போஸ்டர் ரிலீஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் வைகை புயல் வடிவேலு என்பதும், கடந்த சில ஆண்டுகளாக அவர் திரையுலகில் இருந்து ஒதுங்கி இருந்தார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் லைகா நிறுவனம் தயாரிக்கும் ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பதும் இந்த படத்தை சுராஜ் இயக்கவுள்ளார் என்றும் வெளியான செய்தியை பார்த்தோம். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. அட்டகாசமாக இருக்கும் இந்த மோஷன் போஸ்டரை பார்த்து ரசிகர்கள் வடிவேலு படத்தை மீண்டும் பார்க்க ஆவலுடன் இருப்பதாகவும் வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ள சந்தோஷ் நாராயணன், ‘எனக்கு எப்போதும் பிடித்த வடிவேலு அவர்களுடன் பணிபுரிவது மிகவும் பெருமை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
So honoured to work with one of my most favourite artists of all time. #Vadivelu sir ! This one is for you https://t.co/yneIPWlK6U #NaaisekarReturns
— Santhosh Narayanan (@Music_Santhosh) December 10, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com