வைகைப்புயல் வடிவேலு படத்தின் டைட்டில் அறிவிப்பு: அதே 'நாய் சேகர்' தானா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நீண்ட இடைவேளைக்கு பின்னர் திரையுலகில் மீண்டும் எண்ட்ரியாகும் வைகைப்புயல் வடிவேலு நடிக்க இருக்கும் திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது
என்பது குறிப்பிடத்தக்கது
லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குநர் சுராஜ் இயக்கத்தில், வைகைப்புயல் வடிவேலு நடித்திருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த படத்திற்கு ’நாய் சேகர்’ என்று டைட்டில் வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த டைட்டில் சதீஷ் நடிக்கும் படத்திற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது
இதனை அடுத்து இந்த படத்திற்கு என்ன டைட்டில் வைக்கலாம் என்று படக்குழுவினர் ஆலோசித்து வந்தனர். இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்திற்கு ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற டைட்டிலை அதிகாரபூர்வமாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் லைகா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
வைகைப்புயல் வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Vandhutanya Vandhutanya!!! ??
— Lyca Productions (@LycaProductions) October 8, 2021
?? Here is the First Look of all time Entertainer #Vaigaipuyal #Vadivelu in #NaaiSekarReturns@Director_suraaj @Music_Santhosh @UmeshJKumar @dharmachandru @Yuvrajganesan @proyuvraaj @teamaimpr pic.twitter.com/KoFsShV267
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com