குபீர்ன்னு பிறந்த குபேர பிள்ளை நந்தகோபால். வடிவேலு

  • IndiaGlitz, [Tuesday,November 08 2016]

விஷால் ,தமன்னா நடிப்பில் சுராஜ் இயக்கிய 'கத்திச்சண்டை' படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் நடந்தது என்பதை அறிவோம். இந்த விழாவில் பேசிய வைகைப்புயல் வடிவேலு, தான் இந்த படத்தில் மனநல மருத்துவராக நடித்துள்ளதாகவும், டுபாக்கூர் டாக்டர் போன்று இல்லாமல் உண்மையான டாக்டர் வேடம் என்றும் கூறினார்.
மேலும் தான் வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் இருந்தேன் என்று சொல்வது தவறு என்றும் தனக்கு என்றைக்குமே கேப்பு இருந்ததில்லை என்றும் தான் என்றுமே டாப்புதான் என்றும் கூறினார். மேலும் தன்னுடைய ஜோக்குகள் மற்றும் படங்களை பயன்படுத்தியே பலர் அரசியல் முதல் பல்வேறு மிமீஸ் செய்து வருகின்றனர் என்றும் இதற்கெல்லாம் காரணம் தன்னுடைய உழைப்பு தான் என்றும் வடிவேலு கூறினார்.
மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால் குறித்து வடிவேல் கூறும்போது, 'நந்தகோபால், குபீர்ன்னு பிறந்த குபேர பிள்ளை என்றும் அவருக்கு பொய்யான முகம் கிடையாது. உண்மையை மட்டுமே பேசுபவர். அவருடைய நல்ல மனதிற்காகவே இந்த படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறேன்' என்று கூறினார்.

More News

கமல்ஹாசன் பாராட்டு விழாவிற்கு சரத்குமார்-ராதாரவிக்கு அழைப்பு உண்டா? விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுகுழு கூட்டம் வரும் 27ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது...

ரஜினியின் '2.0'வில் இணைந்த பிரிட்டன் பாடகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படத்தின்...

திருமணம் குறித்து சமந்தாவின் உறுதியான தகவல்

தென்னிந்தியாவின் முன்னணி நாயகி சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து வருகிறார்...

தந்தையை அடுத்து மகனை இயக்கும் மணிரத்னம்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய முதல் படமான 'பகல் நிலவு' படத்தில் மறைந்த பிரபல நடிகர் முரளி நடித்திருந்தார்...

விஜய் 61 படத்தின் இசையமைப்பாளர் யார்?

இளையதளபதி விஜய், கீர்த்திசுரேஷ் நடித்து வரும் 'பைரவா படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைய உள்ளது...