வெங்கட்பிரபுவின் அடுத்த இறுதி வேட்பாளர் பட்டியலில் ஹீரோ, ஹீரோயின் வில்லன்

  • IndiaGlitz, [Sunday,May 28 2017]

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபுவின் 'பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரிக்கும் புதிய படத்தில் பணிபுரியும் டெக்னீஷியன்கள் மற்றும் நடிகர்களை வேட்பாளர் பட்டியல் அறிவிப்பது போல் தனது சமூக வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்டு வருகிறது.

முதலகட்ட வேட்பாளர் பட்டியலில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களாக சரவணன் ராஜா மற்றும் பத்ரி கஸ்தூரி ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். இதனையடுத்து 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் எஸ்.வெங்கடேஷ், இசையமைப்பாளர் பிரேம்ஜி, படத்தொகுப்பாளர் பிரவீண் கே.எல், கலை இயக்குனர் விதேஷ் மற்றும் காஸ்ட்யூம் டிசைனர் வாசுகி பாஸ்கர் ஆகியோர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது மூன்றாவது கட்ட வேட்பாளர் அறிவிப்பில் இந்த படத்தின் ஹீரோ, ஹீரோயின், மற்றும் வில்லன் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த படத்தின் ஹீரோவாக வைபவ், ஹீரோயினியாக சனா, மற்றும் வில்லனாக சம்பத் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். நாயகன் வைபவ ஏற்கனவே வெங்கட்பிரபு இயக்கிய 'மங்காத்தா', 'பிரியாணி' மற்றும் 'சென்னை 600028 II' ஆகிய படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதான் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் என்றும் இன்று மாலை இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என்றும் பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனத்தின் சமூக வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More News

ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்' டீசர் ரிலீஸ் தேதி?

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஸ்பைடர்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.

ரஜினியை சந்திக்கும் பிரபலங்கள்: சூடு பிடிக்கின்றது தமிழக அரசியல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் குறித்து ஒரு தீர்மானமான முடிவை எடுத்துவிட்டதாகவும், விரைவில் அனைவரும் எதிர்பார்க்கும் அந்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

நட்டி நட்ராஜின் 'போங்கு': திரை முன்னோட்டம்

'சதுரங்க வேட்டை', 'கதம் கதம்' போன்ற படங்களில் நடித்த நடிகரும் பிரபல ஒளிப்பதிவாளருமான நட்டி நட்ராஜ் நடித்த அடுத்த படம் தான் 'போங்கு' நட்டி நட்ராஜுடன், ரூஹி சிங், சுமன், பூஜா, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை தாஜ் என்பவர் இயக்கியுள்ளார்.

ஒரு கிடாயின் கருணை மனு: திரை முன்னோட்டம்

'பாகுபலி 2', '2,0' , சங்கமித்ரா போன்ற பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் டிரெண்ட் ஆகி வரும் கோலிவுட் திரையுலகில் சிறிய பட்ஜெட் படங்களும் அவ்வப்போது வெளியாகி நல்ல வரவேற்பையும் லாபத்தையும் விருதுகளையும் குவித்தது உண்டு. அதற்கு உதாரணமாக 'காக்கா முட்டை' படத்தை கூறலாம்

இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் தம்பதிக்கு மணிவிழா வாழ்த்துக்கள்

இந்து மதத்தை சேர்ந்த தம்பதியர்களில் ஆண்களுக்கு 60 ஆம் வயதில் "அறுபதாம் கல்யாணம்" என்கிற பெயரில் நடத்தப்படும் விழா "ஷஷ்டியப்த பூர்த்தி" அல்லது "மணிவிழா" என்று அழைக்கப்படுகிறது.