'சிக்ஸர்' சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு

  • IndiaGlitz, [Sunday,August 11 2019]

நடிகர் வைபவ் நடித்துள்ள 'சிக்ஸர்' படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படம் கடந்த சில நாட்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு யூ' சான்றிதழை சென்சார் அதிகாரிகள் வழங்கியுள்ளனர். இதனையடுத்து இந்த படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்து ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

வைபவ், பல்லக் லால்வானி, சதீஷ், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை சாச்சி என்பவர் இயக்கியுள்ளார். பிஜி முத்தையா ஒளிப்பதிவில் ஜிப்ரான் இசையில் ஜோமின் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை டிரைடெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.