வைபவ்-நந்திதா ஜோடி சேரும் படத்தின் டைட்டில் அறிவிப்பு
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
கோலிவுட் திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவராகிய வைபவ் நாயகனாக நடிக்கும் படத்திற்கு 'டாணா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் வைபவ் ஜோடியாக நந்திதா நடிக்கவுள்ளார்.
இந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் பாண்டிராஜனும், காமெடி வேடத்தில் யோகிபாபுவும் நடிக்கவுள்ளனர். மேலும் ஹரீஷ் பெராடி வில்லன் வேடத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தை செல்வராகவனிடம் உதவியாளராக இருந்த யுவராஜ் இயக்கவுள்ளார். இந்த படத்தின் டைட்டில் குறித்து இயக்குனர் யுவராஜ் கூறியபோது, 'தமிழகத்தின் சில பகுதிகளில் போலீஸ்காரர்களை 'டாணாக்காரர்' என்று கூறுவதுண்டு. எனவே போலீஸ் என்ற வார்த்தையை குறிக்கும் வகையில் 'டாணா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
த்ரில் காமெடி படமாக உருவாகவுள்ள இந்த படத்தில் வைபவ் போலீஸாகவும் நந்திதா லேப் டெக்னீஷியனாகவும் நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைப்பாளராகவும், ஷிவா ஒளிப்பதிவாளராகவும் பணிபுரியவுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments