இயல், இசை, நாடகமன்ற புதிய தலைவராக பிரபல நடிகர் நியமனம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
- IndiaGlitz, [Sunday,August 15 2021]
தமிழகத்தில் திமுக அரசு அமைந்து 100 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த 100 நாட்களில் பல நியமனங்கள் நியமிக்கப்பட்டு வருவதை பார்த்து வருகிறோம். குறிப்பாக தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவராக திண்டுக்கல் ஐ லியோனி நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
அதுபோல் தற்போது நடிகர் வாகை சந்திரசேகர் அவர்களுக்கு தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவர் பதவி கிடைத்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமியின் நோக்கங்களை மாநில அளவில் செயல்படுத்தவும் தமிழக கலைகளை பாதுகாப்பு வழங்கவும், தமிழக அரசின் திட்டங்களால் கலைஞர்களை பயனடைய செய்யவும், பல்வேறு கலை பணிகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்தவும் வாகை சந்திரசேகர் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவராக நியமித்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர் நல வாரியத்தின் தலைவர் பொறுப்பையும் சேர்ந்து வாகை சந்திரசேகர் கவனிப்பார் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்
நடிகர் வாகை சந்திரசேகர் கடந்த 2011 முதல் 2021 ஆம் ஆண்டு வரை வேளச்சேரி தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கலைமாமணி விருது, சிறந்த நடிகருக்கான தேசிய விருது உள்பட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.