close
Choose your channels

ரஜினியின் '2.0' படத்தில் வடிவேலு நடிப்பது உண்மையா?

Monday, December 26, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சயகுமார், எமிஜாக்சன் நடித்து வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த படத்தில் வைகைப்புயல் வடிவேலு இணையவுள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

ரஜினி-வடிவேலு கெமிஸ்ட்ரி 'சந்திரமுகி' படத்தில் முழுமையாக ஒர்க் அவுட் ஆனதால் மீண்டும் அதே கூட்டணிய பல வருடங்களாக ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில் இந்த செய்தி அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்தது.

ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவல்களின்படி இந்த செய்தியில் உண்மையில்லை என தெரிகிறது. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஷங்கரின் அழைப்புக்காக காத்துக்கொண்டிருப்பதாக வடிவேலு கூறியது, அவரது தயாரிப்பில் உருவாகவுள்ள 'இம்சை அரசன் 23ஆம் புலிக்கேசி' படத்தின் 2ஆம் பாகத்திற்காக என்றும், இது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு '2.0'வில் வடிவேலு நடிப்பதாக செய்தியாகிவிட்டது என்றும் வடிவேலு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

'கத்திச்சண்டை' படத்தை அடுத்து வடிவேலு, இளையதளபதி விஜய்யின் 'விஜய் 61' மற்றும் ஜி.வி.பிரகாஷ்-ராம்பாலா படத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment