பரிட்சையில் பாஸ் ஆயிருங்க, போலீசை ஏமாத்தாதிங்க: வடிவேலு

கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை ஏற்கனவே தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள வைகைப்புயல் வடிவேலு தற்போது புதிய வீடியோ ஒன்றில் கடவுள் வைத்த இந்த கொரோனா பரிட்சையில் அனைவரும் பாஸ் ஆகிவிடுங்கள் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

கடவுள் இப்போது நமக்கெல்லாம் ஒரு பெரிய சோதனையை வைத்துள்ளார். அந்த சோதனையில் நாம் வெற்றி பெற்றே ஆக வேண்டும். கடவுள் வைத்துள்ள இந்த கொரோனா பரிட்சை கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் வேறு வழியில்லை, இந்த பரிட்சையில் பாஸ் ஆகியே தீரவேண்டும்

வீட்டை விட்டு வெளியே சென்றால் போலீஸ்காரர்கள் அடிப்பதாக சிலர் கூறுகின்றனர். அவர்கள் வேண்டுமென்றே அடிக்கவில்லை. எங்கே போகிறோம் என்பதற்கான சரியான காரணத்தை நாம் கூறினால் அடிக்க மாட்டார்கள். சும்மா ஊரை சுற்றினால் தான் அடிப்பார்கள். மேலும் இந்த நடவடிக்கை எல்லாம் நம்மை காப்பாற்றுவதற்கு தான்

ஒருசிலர் போலீஸ் அடியில் இருந்து தப்பிக்க முதுகில் தட்டை மறைத்து வைத்து ஏமாற்றி வருகின்றனர். இதுபோல் ஏமாற்றி வெளியே போக வேண்டாம். மேலும் இதுபோன்ற காமெடிகள் எல்லாம் இனியும் செல்லாது தற்போது போலீசார் சுதாரிப்பாக இருக்கிறார்கள். நாம் வீட்டில் பத்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக போலீஸ்காரர்கள் தெருவில் நின்று பணி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொண்டு வீட்டில் இருப்போம்’ என்று வைகைப்புயல் வடிவேலு அந்த வீடியோவில் கூறியுள்ளார்