காடுகளை அழித்தோம், வாழ்க்கையை தொலைத்தோம்: வடிவேலுவின் உருக்கமான கொரோனா பாடல்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து இந்தியாவிலும் அதன் தாக்கம் கடந்த சில வாரங்களாக உள்ளது. இதனை அடுத்து இந்தியாவில் உள்ள அனைத்து திரைப்பட படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து தற்போது நடிகர் நடிகைகள் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் தங்களது சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு கொரோனா குறித்த விழிப்புணர்வையும் சில பொழுதுபோக்கு அம்சங்களையும் வெளியிட்டு வருகின்றனர்

இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்து ஏற்கனவே வீடியோ வெளியிட்ட நகைச்சுவை நடிகர் வடிவேலு தற்போது அதனை ஒரு பாடலாக பாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இயற்கையை மதிக்காமல் இருந்த மனிதனுக்கு சரியான பாடம் புகட்டிய கொரோனா வைரஸ் என்று வடிவேலு பாடிய பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பாடலின் வரிகள் பின்வருமாறு

காடுகளை அழித்தோம்
மண் வளம் கெடுத்தோம்
நீர் வளம் முடித்தோம்
நம் வாழ்க்கையை தொலைதோம்

வைரஸாய் வந்தே நீ
பாடம் புகட்டிவிட்டாய்
இயற்கையை மதிக்கின்றோம்
இத்தோடு முடித்துவிடு

More News

கொரோனா நோய்த்தொற்றுக்கு அளிக்கப்படும் மருந்துகளின்மீது செய்யப்படும் ஆய்வுகள்!!! முடிவு என்னவாகும்???

உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும்நிலையில் சமூக விலகல் ஒன்றே கட்டுப்படுத்துவதற்கான வழிமுறையாக பரிந்துரைக்கப்படுகிறது.

சென்னை உள்பட 22 மாவட்டங்கள் அபாகரமானது: மத்திய அரசு அறிவிப்பு

தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, ஈரோடு உள்ளிட்ட 22 மாவட்டங்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அல்லது அபாயகரமான மாவட்டங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சிம்பு, பிரபுதேவாவுடனான உறவு குறித்து மனம் திறந்த நயன்தாரா

நயன்தாரா என்றாலே ஒரு பக்கம் லேடி சூப்பர்ஸ்டார் என்று ஞாபகம் வந்தாலும், இன்னொரு பக்கம் சிம்பு மற்றும் பிரபுதேவாவுடன் அவர் இருந்த ரிலேஷன்ஷிப் ஞாபகம் வரும்.

தமிழகத்தில் இன்று கொரோனா பாசிட்டிவ் எத்தனை பேர்? அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை தினமும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்து வரும் நிலையில்

ரஜினி மகளுக்கு மறுப்பு தெரிவித்த இயக்குனர் மணிரத்னம்: காரணம் இதுதான்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வீட்டில் சும்மா இருக்கும் திரையுலகினர் பலர் வீடியோக்கள், புகைப்படங்கள்