இரங்கல் கூட்டத்தில் 'அம்மா' பாடல் பாடிய வடிவேலு

  • IndiaGlitz, [Tuesday,December 13 2016]

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நேற்று மாலை நடிகர் சங்கத்தின் சார்பில் இரங்கல் கூட்டம் ஒன்று சென்னை கோடம்பாக்கம் ஸ்ரீராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரஜினிகாந்த், நாசர், விஷால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த இரங்கல் கூட்டத்தில் வைகைப்புயல் வடிவேலு பேசியபோது, 'டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11 மணிக்கு அம்மா ஜெயலலிதா மறைந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டவுடன் தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்கள் கண்ணீர் விட்டு கதறின. அந்த குடும்பங்களில் ஒன்று என்னுடைய குடும்பம்.

பெற்ற தாயை விட அம்மா என்ற சொல்லுக்கே அர்த்தம் கற்பிக்கும் அளவில் வாழ்ந்தவர் நமது முதல்வர் அம்மா. என்று கூறிய வடிவேலு, சிவாஜி கணேசன் அவர்கள் படத்தில் அம்மா குறித்து வரும் ஒரு பாடலின் வரியையும் பாடினார். அந்த பாடல்

கன்றின் குரலும் கன்னித்தமிழும் சொல்லும் வார்த்தை அம்மா அம்மா
கருணை தேடி அலையும் உயிர்கள் உருகும் வார்த்தை அம்மா அம்மா
எந்த மனதில் பாசம் உண்டோ அந்த மனமே அம்மா அம்மா

என்ற பாடலை பாடிய வடிவேலு பின்னர் எம்.ஜி.ஆர் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலையும் பாடினார். இந்த பாடல் இந்த நேரத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்று வடிவேலு கூறினார். அந்த பாடல்

மேக வீதியில் நடப்பாள்
உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்
மலை முடி தொடுவாள்
மலர் மணம் தருவாள்
மங்கல வாழ்வுக்கு துணை இருப்பாள்
அந்த தாய் இல்லாமல் நான் இல்லை