close
Choose your channels

2-வது இன்னிங்க்ஸ்-க்கு தயாராகும் வைகைப்புயல்....! அதுவும் பிரபல இயக்குனருடன் கூட்டணி.....!

Monday, August 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் தலைசிறந்த நகைச்சுவை நடிகராகவும், மிகச்சிறந்த குணசித்திர கலைஞராகவும் வலம் வருபவர் தான் நடிகர் வடிவேலு. கடந்த சில வருடங்களாக இவர் திரையில் தோன்றவில்லை என்றாலும், இணையம் முழுவதும் இவரது பேச்சு தான்.

வடிவேலுவின் புகைப்படம் இல்லாமலோ, ஒரு டயலாக் இல்லாமலோ ஒரு மனிதன் இணைய உலகை கடக்க முடியாது. அந்த அளவிற்கு இக்கால சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மத்தியிலும் இன்னும் பிரபலமாக உள்ளார். இவர் இறுதியாக நடித்திருந்தது இம்சை அரசன் 24 ஆம் புலிக்கேசி படத்தில் தான். இரண்டாம் பாகம் எடுப்பதற்குள் அவர் அப்படத்திலிருந்து விலகிவிட்டார். இதன்பிறகு எந்த படங்களிலும் இவர் ஒப்பந்தமாகவில்லை. தயாரிப்பாளர் ஷங்கர் வைக்கும் கோரிக்கை என்னவெனில், "ஒன்று படத்தை முடித்து தாருங்கள், இல்லையெனில் நஷ்டமான 6 கோடியை திருப்பி தாருங்கள்" என்பது தான். ஆனால் இதில் எதையும் செய்ய வடிவேலு தயாராக இல்லை.

ரசிகர்கள் அவர் பெரிய திரையில் ரீ-என்ட்ரீ கொடுப்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், வடிவேலு ஓடிடி தளத்தில் நடிக்க இருக்கிறார் செய்திகள் வெளியானது.

வடிவேலு, இயக்குனர் சுராஜ் காம்போ என்றாலே ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். தலைநகரம் படத்தில், நாய்கேசர் கதாபாத்திரம், மருதமலை படத்தில் போலீஸ் கதாபாத்திரம், இவை இரண்டும் வடிவேலுவின் காமெடி ஹிட்டுக்கு திருப்பு முனையாக அமைந்திருந்தது. வடிவேலு ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று கூறி வந்த நிலையில், மீண்டும் அவரை கத்திச்சண்டை படம் மூலம் நகைச்சுவை நாயகனாக களம் இறக்கிய பெருமை சுராஜையே சாரும்.

இந்நிலையில் வடிவேலுவின் 'நாய்சேகர்' என்ற பிரபல நகைச்சுவை கதாபாத்திரத்தின் பெயரில் திரைப்படம் ஒன்றை எடுக்கவுள்ளார் சுராஜ். இப்படம் வடிவேலுவின் 2-ஆம் இன்னிங்ஸ்-ஆக இருக்கும் என்றும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் கூடிய விரைவில் வரும் என்றும் சினிமா வட்டாரங்கள் கூறுகிறது.

தலைநகரம்-2 படத்தில் வடிவேலு நாயகனாக நடிக்கவிருப்பதாகவும், இயக்குனர் சுராஜ் படம் குறித்த முக்கிய தகவல்களும், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே நம் செய்தி தளத்தில் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment