கோவாலு, கிச்சுனமூர்த்தி, நேசமணி....! வைரலாகும் புதிய மீம்கள்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
கமலின் "விக்ரம்" பட லுக்கை தழுவி இணையத்தில் பல மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. அந்தவகையில் வடிவேலுவின் புதிய மீம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர்கள் கமல்ஹாசன், பகத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி நடித்துவரும் படம்தான் "விக்ரம்". இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது. தற்போது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. இதை டுவிட்டரில் பகிர்ந்திருந்த கமல் ’வீரமே வாகையைச் சூடும். மீண்டும் துணிகிறேன், நம் இளம் திறமைகளை உம் முன் சமர்ப்பிக்க. நேற்றே போல நாளையும் நமதாக வாழ்த்தட்டும் தாயகம். விக்ரம்… விக்ரம்…’ என பதிவிட்டிருந்தார். இத்திரைப்படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனத்துடன் இணைந்து டர்மரீக் மீடியா நிறுவனம் தயாரிக்க உள்ளது. க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார்.
கமல், ஃபகத், விஜய் சேதுபதி புகைப்படங்களுக்கு பதிலாக, தளபதி ரசிகர்கள் விஜய் மற்றும் முக்கிய நடிகர்களின் புகைப்படத்தையும், தல ரசிகர்கள் அஜித் மற்றும் பிற நடிகர்களின் புகைப்படங்களையும் இணைத்து, மீம்ஸ்களை வைரலாக்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரண்ட்ஸ் படத்தின் முக்கிய நகைச்சுவை கேரக்டர்களான, கோவாலு, கிச்சுனமூர்த்தி, நேசமணி உள்ளிட்டவர்களின் புகைப்படங்களின் வைரலாகி வருகிறது. இந்த போஸ்டருக்கு ’நேசமணி’ என டைட்டில் வைத்து, ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments