சுந்தர் சி அடுத்த படத்தின் ஹீரோ வடிவேலுவா? கலக்க போகும் காமெடி..!

  • IndiaGlitz, [Wednesday,June 12 2024]

சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’அரண்மனை 4 ’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்தது.

இந்நிலையில் சுந்தர் சியின் அடுத்த படம் குறித்த தகவல்கள் இணையதளங்களில் கசிந்து வருகிறது என்பதும் குறிப்பாக அவர் ’அரண்மனை 5’ மற்றும் ’கலகலப்பு 3’ ஆகிய இரண்டில் ஒன்றை இயக்குவார் என்று கூறப்பட்டது.

அதுமட்டுமின்றி நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் ’சங்கமித்ரா’ படத்தையும் விரைவில் தொடங்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பும் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி சுந்தர் சி மீண்டும் வடிவேலு உடன் கைகோர்த்து ஒரு முழு நீள நகைச்சுவை படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. சுந்தர் சி மற்றும் வடிவேலு ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

சுந்தர் சி மற்றும் வடிவேலு இணைந்து நடித்த ’தலைநகரம் ’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் அதே போன்று மீண்டும் ஒரு காமெடி கலக்கல் படம் வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.