சுந்தர் சி அடுத்த படத்தின் ஹீரோ வடிவேலுவா? கலக்க போகும் காமெடி..!

  • IndiaGlitz, [Wednesday,June 12 2024]

சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’அரண்மனை 4 ’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்தது.

இந்நிலையில் சுந்தர் சியின் அடுத்த படம் குறித்த தகவல்கள் இணையதளங்களில் கசிந்து வருகிறது என்பதும் குறிப்பாக அவர் ’அரண்மனை 5’ மற்றும் ’கலகலப்பு 3’ ஆகிய இரண்டில் ஒன்றை இயக்குவார் என்று கூறப்பட்டது.

அதுமட்டுமின்றி நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் ’சங்கமித்ரா’ படத்தையும் விரைவில் தொடங்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பும் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி சுந்தர் சி மீண்டும் வடிவேலு உடன் கைகோர்த்து ஒரு முழு நீள நகைச்சுவை படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. சுந்தர் சி மற்றும் வடிவேலு ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

சுந்தர் சி மற்றும் வடிவேலு இணைந்து நடித்த ’தலைநகரம் ’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் அதே போன்று மீண்டும் ஒரு காமெடி கலக்கல் படம் வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

More News

சொந்த வீடு வாங்க, பித்ரு தோஷம் நீங்க எளிய பரிகாரம் !

பிரபல ஜோதிடர் நற்பவி நம்பிராஜன் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி, பித்ரு தோஷம் மற்றும் அதன் தீர்வைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கிறது.

பிரமாண்டமாக நடந்தது அர்ஜுன் மகள் திருமணம்.. திரையுலகினர் வாழ்த்து..!

ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் நேற்று அதாவது ஜூன் 10ஆம் தேதி சென்னையில்

பெங்களூரு இளைஞர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: பிரபல நடிகர் அதிரடி கைது..!

பெங்களூரில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல கன்னட நடிகர் தர்ஷன் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எலான் மஸ்க் போட்ட ஒரே ஒரு ட்வீட்.. டிரெண்டிங்கில் 4 வருடங்களுக்கு முன் வெளியான தமிழ் திரைப்படம்..!

உலகின் முன்னணி தொழில் அதிபர் எலான் மஸ்க் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்ட ஒரே ஒரு ட்வீட் காரணமாக  7 வருடங்களுக்கு முன் வெளியான தமிழ் திரைப்படம் தற்போது

வனிதா விஜயகுமார் பிதா திரைப்பட அறிவிப்பு விழா!! திரையுலக பிரபலங்கள் பங்கேற்பு..!

ஸ்ரீநிக் புரடொக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் பால சுப்பிரமணி & சதீஷ் குமார் தயாரிப்பில், இயக்குனர் கார்த்திக் குமார் இயக்கத்தில், மதி நடிகராக அறிமுகமாகும் திரைப்படம்