வடிவேலுவின் 'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்': ரிலீஸ் தேதியை அறிவித்த லைகா!

வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நாயகனாக நடிக்கும் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படம் ரிலீசுக்கு தயாராக செய்திகள் வெளியானது

இந்த நிலையில் இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் தற்போது டிசம்பர் 9ஆம் தேதி இந்த படம் ரிலீசாக இருப்பதாக லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்

வடிவேலு, ஷிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், முனிஸ்காந்த், ஷிவானி நாராயணன், ஆர்ஜே விக்னேஷ், சஞ்சனா சிங், உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. சுராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படம் வடிவேலுவுக்கு ஒரு திருப்புமுனையை கொடுக்கும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.