'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் 'அப்பத்தா' பாடல்: பட்டையை கிளப்பும் வடிவேலு!

வைகைப்புயல் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடலான ‘அப்பத்தா’ என்ற பாடல் சற்று முன் வெளியாகிய இணையதளங்களில் வைரலாகி வருகிறது

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி இந்த பாடலை வடிவேலு பாடியுள்ளார். இந்த பாடலை பிக்பாஸ் தமிழ் சீசன் 6 போட்டியாளர் அசல் கோலார் மற்றும் துரை எழுதி உள்ளனர். இந்த பாடல் முதல்முறை கேட்கும்போதே சூப்பராக உள்ளது என்றும் குறிப்பாக இந்த பாடலில் வடிவேலு பட்டையை கிளப்பியுள்ளார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த பாடலுக்கு பிரபுதேவா நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வடிவேலு, ஷிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், முனிஸ்காந்த், ஷிவானி நாராயணன், ஆர்ஜே விக்னேஷ், சஞ்சனா சிங், உள்பட பலர் நடிப்பில் இந்த படம் உருவாகி உள்ளது.