ஷங்கரின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்
- IndiaGlitz, [Friday,August 26 2016]
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது ரஜினியின் '2.0' படத்தில் பிசியாக இருக்கும் நிலையில் அவர் தயாரிக்கவுள்ள படம் குறித்த தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதுதான் வடிவேலுவின் 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி'யின் அடுத்த பாகம்.
சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலுவின் இரட்டை வேட நடிப்பில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தின் 2ஆம் பாகம் தற்போது 10 வருடங்களுக்கு பின்னர் உருவாகவுள்ளது.
முதல் பாகத்தை இயக்கிய சிம்புதேவனே இரண்டாவது பாகத்தையும் இயக்க்கவுள்ளதாகவும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவும், எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்யவும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஷங்கர் மற்றும் லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கும் என்றும் சிம்புதேவனுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நிலையில் கடந்த ஆண்டு சிம்புதேவன் இயக்கிய 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.