மீண்டும் களம் இறங்குகிறார் வடிவேலு

  • IndiaGlitz, [Tuesday,October 27 2015]

கோலிவுட் திரையுலகில் அசைக்க முடியாத நகைச்சுவை நடிகராக இருந்த வடிவேலு, கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் திடீரென காணாமல் போய்விட்டார். தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் வடிவேலுவை புறக்கணித்தனர். இந்த கேப்பில் சந்தானம், சூரி ஆகியோர் தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்தாலும், வடிவேலுவின் இடம் இன்னும் காலியாகவே இருப்பதாகத்தான் திரையுலகில் கருதப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணிக்கு ஆதரவு தந்த வடிவேலு, மதுரை நாடக நடிகர்கள் உள்பட பலரிடம் வாக்கு சேகரித்து விஷால் அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார். இந்த தேர்தல் காரணமாக இளையதலைமுறை நடிகர்களான விஷால் ,விக்ராந்த், விஷ்ணு ஆகியோர்களிடம் வடிவேலு நெருக்கமாகிவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் வடிவேலுவின் சகஜமான பேச்சு இளம் நடிகர்களை கவர்ந்துவிட்டதால் அவருக்கு மீண்டும் தங்கள் படங்களில் வாய்ப்பு கொடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஹீரோ கனவுகளை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு மீண்டும் நகைச்சுவை நடிகராக இரண்டாவது இன்னிங்ஸை வெகுவிரைவில் களம் இறங்குகிறார் வடிவேலு. முதலில் விஷால் தன்னுடைய அடுத்த படத்தில் வடிவேலுக்கு கொடுக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

More News

திரைத்துறையில் காலடி எடுத்து வைக்கும் சிம்ரனின் கணவர்

கடந்த 1997ஆம் வருடம் சிவாஜி கணேசன், விஜய் நடித்த ஒன்ஸ்மோர் படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகிற்கு அறிமுகமான சிம்ரன் அதன் பின்னர் கமல்ஹாசன், விஜய், அஜீத்...

தேர்தலுக்கு பின் நடிகர்கள் ஒற்றுமையை நிரூபித்த விஷால்

சமீபத்தில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தலில் நடிகர்கள் இரு பிரிவினர்களாக பிரிந்தாலும் தேர்தலுக்கு பின் மீண்டும்....

விஜய், அஜீத் படங்களுக்கு இசையமைக்க ஆசை. தமன்

ஈரம், காஞ்சனா, ஒஸ்தி, சேட்டை, மற்றும் சமீபத்தில் ரிலீஸான சிம்புவின் 'வாலு' உள்பட பல தமிழ் படங்களுக்கும் ஏராளமான தெலுங்கு...

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மலாக்கா மாகாண கவர்னர் மதிய விருந்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடந்ததை அடுத்து தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக 'கபாலி' குழுவினர் மலேசியா சென்றுள்ளனர்....

கும்பகோணம் பள்ளி தீவிபத்திற்காக நடிகர்களிடம் வசூல் செய்த ரூ.60 லட்சம் எங்கே?

கடந்த 2004ஆம் ஆண்டு தமிழகத்தையே குலுங்க வைத்த ஒரு சம்பவம் கும்பகோணம் பள்ளி தீவிபத்து. இந்த விபத்தில் 94 குழந்தைகள் பரிதாபமாக பலியாகினர்....